அமைச்சர்களுக்கு தான் குளிர்விட்டு போச்சி..!விஜய்க்கு ஆதரவு தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த்..!

0
228
Premalathavijayakanth

கடந்த 3 நாட்களாக விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் படத்திற்கு அதிமுக கட்சியின் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள சில சர்ச்சையான காட்சிகளை நீக்க வேண்டும் என்று அதிமுக கட்சியினர் பல்வேறு பகுதிகலில் போராட்டத்தில் கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 8) துவங்கினர்

இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் சர்க்கார் திரைப்படம் பற்றியும் அரசின் நிர்வாக சீர்கேடு பற்றி தெளிவாக எடுத்துரைக்கும் எங்கள் கழக பொருளாளர் பாசமிகு அண்ணியார் மக்களின் அன்னயார் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள்…

Posted by தைரியம் தன்னம்பிக்கை நிறைந்த தலைவர் கேப்டன் on Friday, November 9, 2018

இதையடுத்து சர்கார் படத்தில் இடம்பெற்ற சில சர்ச்சைக்குரிய காட்சிகளை தணிக்கை குழுவிடம் அனுமதி பெற்று நீக்கிவிடுவதாக சர்கார் படக்குழுவினர் ஒப்புக்கொண்டனர். இருப்பினும் அதிமுகவினர் சர்கார் படத்தை எதிர்த்து போராட்டங்களை நடத்தி வந்தனர்.

தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல் என்று ரஜினி,கமல், விஷால் என்று பல்வேறு நடிகர்களும் சர்கார் படத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் சர்கார் படம் குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா,திரையுலகினர் திரைப் படங்களை சர்ச்சைக்குள் கொண்டுச்சென்று, அதன் மூலம் படத்தை ஓட்ட நினைக்கிறார்களா,அப்படியான படங்களில்தான் விஜய் சமீபகாலமாக நடித்து வருகிறார். இதையெல்லாம் யோசித்து பார்த்து விஜய் நடிக்க வேண்டும். அதேநேரம் சென்சார் செய்யப்பட்ட படத்தை அதிமுகவினர் தடை செய்வது வன்மையாகன கண்டனத்திற்கு உரியது என்றும் தெரிவித்துள்ளார்.மேலும், ஜெயலலிதா இல்லாதது அமைச்சர்களுக்கு தான் குளிர் விட்டு போய்விட்டது என்று கூறியுள்ளார்.