திருமணத்திற்கு பிறகு நடிகர் பிரேம்ஜி முதல்முறையாக அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்பவர் பிரேம்ஜி அமரன். இவர் சினிமா உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பி ஆவார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் பாடலாசிரியர், பின்னணி பாடகர் ஆவார்.
நீண்ட நாட்களாக திருமணம் செய்யாமல் பேச்சுலர் ஆக சுற்றிக் கொண்டிருந்த பிரேம்ஜிக்கு கடந்த ஜூன் 9 ஆம் தேதி தான் திருமணம் நடந்தது. இவர் இந்து என்ற பெண்ணைத்தான் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தை பிரேம்ஜியின் அண்ணன் மற்றும் இயக்குனருமான வெங்கட் பிரபு தான் முன் நின்று நடத்தி வைத்தார். நீண்ட நாட்களாக சிங்கிளாக இருந்த பிரேம்ஜி இப்போது திருமண வாழ்க்கையில் இணைந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரேம்ஜி மனைவி குறித்து:
பிரேம்ஜி மனைவி இந்து சேலத்தைச் சேர்ந்தவர். இவர்களுடைய திருமணம் சமீபத்தில் திருத்தணியில் உள்ள முருகன் கோவிலில் நடந்த நிலையில் முக்கிய பிரபலங்கள் மட்டும் கலந்து கொண்டனர். இவர் திருமணத்தின் போது வங்கித் துறையில் பணியாற்றி வந்தார். காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரேம்ஜி மட்டும் இந்து சுமார் 20 வயது வித்தியாசம் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பக்கம் இவர்கள் திருமணம் குறித்து விமர்சனங்கள் வந்தாலும் பிரேம்ஜியும், இந்துவும் தங்களின் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.
பிரேம்ஜி மாமியார் மசாலா:
பிரேம்ஜி தனது மனைவியுடன் இணைந்து சமையல் செய்வது, ஊர் சுற்றுவது என என்ஜாய் செய்து வருகிறார். அதை இந்து அடிக்கடி தனது சமூக வலைத்தளத்தில் வீடியோவாக எடுத்து வெளியிட்டு வருகிறார். அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் ‘பிரேம்ஜி மாமியார் மசாலா’ என்னும் மசாலா தொழிலையும் இந்துவின் தாய் செய்து வருகிறார். அதற்கான பிரமோஷன் வேலைகளிலும் பிரேம்ஜியின் மனைவி ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பிரேம்ஜி ஒரு youtube சேனலுக்கு பேட்டி அளித்து இருக்கிறார்கள்.
மனைவி போட்ட கண்டிஷன்:
அதில் தன் திருமண வாழ்க்கை குறித்து அவர் பகிர்ந்துள்ளார். அதில், என் மனைவி இந்துவிடம் எல்லா விஷயமும் எனக்கு பிடிக்கும். ஆனால் எனக்கு என் நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டிக்கு செல்ல மட்டும் அனுமதி கிடையாது. திருமணத்திற்கு முன்பாக நான் நிறைய பார்ட்டிக்கு செல்வேன். ஆனால், இப்போது எந்தப் பார்ட்டிக்கும் செல்ல எனது மனைவி சம்மதம் சொல்வதில்லை. அது மட்டும் இல்லை இரவு 11:30 மணி அல்லது 12 மணி ஆகிவிட்டது என்றால் கரெக்டாக என் மனைவியிடம் இருந்து கால் வந்துவிடும்.
கொஞ்சம் கண்டிப்பானவர்:
எங்க இருக்கீங்க, எப்போ வருவீங்க என என் மனைவி கொஞ்சம் கண்டிப்பாக கேட்பார் என்று கூறியுள்ளார். பின், பிரேம்ஜி மாமியார் மசாலா குறித்து பேசுகையில், முதலில் இன்ஸ்டாகிராமில் தான் பிசினஸ் பண்ணலாம்னு இருந்தோம். அதற்கு பிராண்ட் பெயர் என்ன வைக்கலாம் என்று பப்ளிக் கிட்டதான் முதலில் கேட்டோம். அப்புறம் நான் சும்மா ‘பிரேம்ஜிஸ் மாமியார் மசாலா’ என்று போட்டேன். அதற்கு நிறைய லைக் வந்தது. சரி ஓகே என்று அந்த பெயரையே வைத்து விட்டோம் என்று பிரேம்ஜி கூறியுள்ளார்.