திடீரென்று விஜய் ரசிகராக மாறிய பிரேம்ஜி.! விடியோவால் அதிர்ச்சியான ரசிகர்கள்.!

0
436
Premji

தமிழ் சினிமாவில் இரண்டு துருவங்களாக திகழ்ந்து வருபவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவருக்கும் இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் பற்றி நமக்கு தெரியும். மேலும், சினிமா நடிகர்கள் கூட இவர்கள் இருவருக்கும் வெறித்தனமான ரசிகர்களாக இருந்து தான் வருகின்றனர்.

பெரும்பாலும் திரைப்படங்களில் விஜய் மற்றும் அஜித் ரெபரென்ஸை பல நடிகர்கள் பயன்படுத்தியுள்ளனர். குறிப்பாக சிவகார்த்திகேயன் தொடங்கி சிம்பு வரை அஜித்தை பல படங்களில் ரெபரென்ஸாக பயன்படுத்தியுள்ளனர். அந்த வகையில் வெங்கட் பிரபு அண்ட் கோ தீவீர அஜித் ரசிகர்கள் என்று அனைவருக்கும் தெரியும்.

- Advertisement -

அதே போல வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜியும் தீவிர அஜித் ரசிகர் என்பது பலரும் அறிந்த ஒன்றுதான். மேலும், பிரேம்ஜி, அஜித் நடித்த மங்காத்தா படத்தில் கூட நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது இவர் விஜய்யின் பக்கம் சாய்ந்துள்ளார்.

சமீபத்தில் இவர், தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய் தனது பட விழாக்களில் பேசிய சில வரிகள் அடங்கிய வீடியோவை பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் ‘நீங்கள் அஜித் ரசிகராச்சே இப்போ என்ன திடீர்னு விஜய் பக்கம் வரீங்க ‘ என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement