ரஜினி படம் குறித்து நடிகர் பிரித்திவிராஜ் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிரித்விராஜ். இவர் மலையாளத்தில் மிகப் பிரபலமான நடிகர் ஆவார். இவருடைய தந்தை சுகுமாரன். இவரும் மலையாளத்தில் பிரபலமான நடிகர் ஆவார். அதேபோல் தாயார் மல்லிகா சுகுமாரன் பிரபலமான நடிகை. இவருக்கு இந்திரஜித் சுகுமார் என்ற மூத்த மகன் இருக்கிறார். இவரும் மலையாளம், தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
பின் இவர்களுடைய இரண்டாவது மகன் பிரித்விராஜ் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் 2002 ஆம் ஆண்டு நந்தனம் என்ற மலையாள மொழி திரைப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன் பின் இவர் தமிழில் கனா கண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
பிரித்திவிராஜ் திரைப்பயணம்:
அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். அதற்கு பிறகு இவருக்கு தமிழ் மொழியில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பின் இவர் மலையாள மொழியில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும், இவர் ஆகஸ்ட் சினிமா என்ற பெயரில் ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றார்.
கடைசியாக இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி இருந்த படம் ஆடு ஜீவிதம். இயக்குனர் பிளஸ்ஸி இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் அமலா பால், கோகுல், Jimmy Jean-Louis உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.
எம்புரான் படம்:
இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருந்தது. இதை அடுத்தும் இவர் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். தற்போது பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் எல்2; எம்புரான். இந்த படத்தினுடைய முதல் பாகம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. முதல் பாகத்தில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. இந்த படம் மார்ச் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
விழாவில் ப்ரித்விராஜ் பேசியது:
இந்நிலையில் இந்த படத்தினுடைய டீசர் வெளியீட்டு விழா இன்று கொச்சியில் நடைபெற்று இருக்கிறது. இதில் மம்முட்டி- மோகன்லால் உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது இந்த விழாவில் பேசிய இயக்குனர் பிரித்திவிராஜ், லைகா ப்ரொடக்ஷனில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், என்னை ரஜினி சாரோட ஒரு படம் இயக்க கேட்டிருந்தார். இது புது இயக்குனர்களுக்கு பெரிய வாய்ப்பு. ஆனால், அந்த நேரத்தில் நான் பகுதி நேர இயக்குனராகத்தான் இருந்தேன். அந்த பொறுப்புகளுக்கு நான் தகுதியாக இல்லை.
ரஜினி படம் குறித்து சொன்னது:
ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் கதையை தயார் செய்து, அப்படியே எடுத்து முடித்தாக வேண்டும். அது சாத்தியமில்லாத விஷயம். அதனால்தான் அந்த படம் எடுக்க முடியவில்லை. சுபாஸ்கரன் சார், ஒரு நாள் அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டார். லூசிபர் படத்தினுடைய இரண்டாம் பாகமான எம்புரான் படத்தை இயக்க இருப்பதாக சொன்னேன். உங்களுடைய கனவு படத்தில் நான் எப்படி ஒரு அங்கமாக இருப்பது என்று கேட்டார். இந்த பதிலை நான் எதிர்பார்க்கவே இல்லை. அப்படித்தான் இந்த படத்திற்கு லைகா நிறுவனம் வந்தது. மலையாள சினிமாவில் லைகா தயாரிக்கும் முதல் படமே இதுதான் என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.