3 கோடி ரூபாய் காருக்கு 7 லட்சம் கொடுத்து பேன்சி நம்பர் வாங்கிய பிரபல நடிகர் – புகைப்படம் உள்ளே

0
1037
Actor prithivraj

நடிகர் பிரித்திவ்ராஜ் மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருபவர். தமிழில் இராவணன் படத்தின் மூலம் முத்திரை பதித்தார். இருந்தும் மலையாள சினிமாவில் தன்னை நிலைநிறுத்தி உள்ளார்.

prithivraj

இவர் ஒரு கார் பிரியர் ஆவார். தன் வீட்டில் டஜன் கணக்கில் கார்களை நிறுத்தி வைத்துள்ளார். தற்போது லம்போர்கினி பிராண்டில் 3.25 கோடி மதிப்புள்ள ஹுரகன் ரக காரை வாங்கியுள்ளார்.

இதனை ரெஜிஸ்டர் செய்ய சென்ற போது அந்த காருக்கென ஒரு பேன்சி நம்பரை வாங்க முடிவு செய்துள்ளார். KL 7 CN 1 என்ற நம்பரை வாங்க முடிவு செய்தார். இதற்காக அங்கு உள்ள ஆர்.டி.ஓ ஆபீஸ் சென்றுள்ளார்.

lamborgini

ஆனால் அந்த நம்பரை 5 பேர் கேட்டுள்ளனர். இதனால் அந்த நம்பர் ஏலத்தில் விடப்பட்டது. ஆரம்பத்தில் 10,000க்கு விடப்பட்ட இந்த நம்பரை 7,00,000 வரை சென்று இறுதியில் ஏலத்தில் வாங்கியுள்ளார் பிரித்திவ்ராஜ். இதனால் அவரது ரசிகர்கள் வாயை பிளந்துள்ளனர்.