பொய்யான புகார் கொடுத்த நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஹேமா கமிட்டி குறித்து பிரித்திவிராஜ் ஓபன் டாக்

0
340
- Advertisement -

சமீப காலமாகவே சினிமாவில் பெண்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் என்ற பெயரில் பாலியல் தொல்லை கொடுப்பது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இது குறித்து பலருமே புகார் கொடுத்திருந்தார்கள். அந்த வகையில் மலையாள சினிமாவிலும் இந்த மாதிரி நிறைய நிகழ்வுகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. அதில் நடிகர் திலீப்குமார் பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைது செய்யப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

-விளம்பரம்-

இதனால் கடந்த 2018 ஆம் ஆண்டு சினிமா துறையில் இருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான பிரச்சினைகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று கேரள மாநில அரசு அமைத்திருந்தது. பின் இது தொடர்பாக விசாரணையும் நடத்தி இருந்தார்கள். பின் கடந்த 2019 ஆம் ஆண்டு முதலமைச்சர் பினராய் விஜயன் இடம் 233 பக்க அறிக்கை ஆவணங்கள், ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரத்துடன் சமர்ப்பித்து இருந்தார்கள். ஆனால், இதை பல காரணங்களால் வெளியிடாமல் இருந்தது.

- Advertisement -

ஹேமா கமிட்டி :

பின் கடந்த 19 ஆம் தேதி ஹேமா கமிட்டி அறிக்கையை அரசு வெளியிட்டது. இது மலையாள திரை உலகில் மிகப்பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. அதில், நிறைய பெண்கள் அட்ஜஸ்ட்மெண்ட் என்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்திருக்கிறது. பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களுமே பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பதாக தெரிகிறது. இது குறித்து கேரள சினிமாவில் பெரிய விவாதமே நடந்து கொண்டிருக்கிறது.

பிரபலங்கள் கருத்து:

மேலும், இது தொடர்பாக பிரபலங்கள் பலருமே தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால், இந்த ஹேமா கமிட்டி விவகாரம் தொடர்பாக இதுவரை மலையாள திரை உலகின் சூப்பர் ஸ்டார்களான மோகன்லால், மம்மூட்டி எதுவுமே பேசவில்லை. இதை அடுத்து மலையாள திரைப்பட சங்கமான அம்மா சில தினங்களுக்கு முன்பு தான் கலைக்கப்பட்டது. பாலியல் புகார் குறித்து ஆலோசிக்க அம்மா சங்கம் கூடுவதாக இருந்த நிலையில் மோகன்லால் உட்பட 17 நிர்வாகிகள் ராஜினாமா செய்து விலகி விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

பிரிதிவிராஜ் பேட்டி:

அதோட மலையாள திரை உலகில் பாலியல் குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சில நடிகைகள் பிரபல நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் அளித்திருக்கிறார்கள். இது தொடர்பாக கேரளா அரசும் விசாரிக்க சிறப்பு குழுவை நியமித்திருக்கிறது. இது தொடர்பாக மலையாள திரை உலகில் இயக்குனர்கள், நடிகர்கள் என பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக நடிகர் பிருத்திவிராஜ் கூறியிருப்பது, மலையாள நடிகர்கள் சங்கமான அம்மா பாலியல் புகார்கள் எல்லாம் தீர்க்கத் தவறி இருக்கிறது.

ஹேமா கமிட்டி குறித்து சொன்னது:

நடிகைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கி தர வேண்டும். இது ரொம்ப முக்கியமானது. அதே நேரம் ஹேமா கமிட்டியில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணைக்கு பிறகு யாராவது குற்றவாளிகள் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அதேபோல் குற்றசாட்டுகள் பொய்யானது என்று நியமிக்கப்பட்டால் பொய்யான புகார் கொடுத்த நடிகைகளையும் தண்டிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இப்படி பிரிதிவிராஜ் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement