மலையாள சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் பிரிதிவிராஜ். இவர் மலையாளத்தில் மட்டும் இல்லாமல் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் பிரித்திவிராஜ் அவர்கள் தன்னுடைய அடுத்த படமான ஆடு ஜீவிதம் என்ற மலையாள படத்தின் படப்பிடிப்புக்காக ஜோர்டானுக்கு சென்றிருந்தார். இந்த படத்தை இயக்குனர் ப்ளெஸ்சி இயக்குகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இயக்குனர், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் உட்பட 58 பேர் கொண்ட குழுவினர் ஜோர்டானில் உள்ள வடி ரம் பாலைவனத்திற்கு சென்று படப்பிடிப்பை நடத்தி இருந்தார்கள்.
துரதிஸ்டவசமாக கொரோனா வைரசின் தாக்கம் நாடு முழுவதும் அதிகமாகி கொண்டிருப்பதால் உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இதனால் பிரித்திவிராஜ் உட்பட ஆடு ஜீவிதம் படக்குழுவினர் அனைவரும் இந்தியாவிற்கு திரும்ப முடியாமல் பாலைவனத்தில் சிக்கித் தவித்து வந்துள்ளனர்.
பிறகு கேரளா அரசாங்கம் அவர்களை சிறப்பு விமானத்தின் மூலம் மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வந்தனர். மேலும், விமான நிலையத்துக்கு வந்த உடன் பிரித்திவிராஜ் உட்பட படக்குழுவினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதோடு 14 நாட்கள் அவர்களை தனிமைப்படுத்தபட்டனர். இந்நிலையில் ஆடு ஜீவிதம் படக் குழுவின் உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருக்கிறது என்று கடந்த செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது.
அவருக்கு தற்போது 58 வயது தான் ஆகிறது. தற்போது அவரை குன்னங்குளம் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதே போல ஜோர்டானில் படக்குழுவிற்கு மொழிப்பெயர்ப்பாளராக இருந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஆடு ஜீவிதம் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.