அவ்ளோ கேவலமா சாதாரணமா ஆக்கிடோம் – 90ஸ் கிட்ஸ்களை மீண்டும் கடுப்பில் ஆழ்த்திய 2k kids வீடியோ (எவன்டா இதெல்லாம் எடுக்கறது)

0
1191
priya
- Advertisement -

சமூக வலைதளத்தின் மூலம் பல்வேறு நபர்கள் பிரபலமாகியுள்ளனர். அந்த வகையில் இளைஞர்கள் மத்தியில் டிக் டாக், மியூசிக்கலி மற்றும் டப்மாஸ் போன்ற ஆப்கள் பெரும் மோகத்தை ஏற்படுத்தி இருந்தது.டிக் டாக் தடை செய்யப்பட்ட பின்னர் அதில் இருந்தவர்கள் அனைவரும் இன்ஸ்டாகிராம், யூடுயூப் என்று வந்துவிட்டனர். லைக்ஸ் மற்றும் வியூஸ்ற்காக என்ன வேண்டுமானாலும் சிலர் செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளத்தில் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்திவர்கள் குட்டி வடிவேலு மற்றும் ஷோபி.

-விளம்பரம்-

பள்ளிக்கு செல்லும் வயதில் வயதுக்கு மீறி வீடியோ போட்டு பிரபலமானவர் குட்டி வடிவேலு. பல 90ஸ் கிட்ஸ்கள் இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கையில் இன்னும் வயசுக்கு கூட வராத இவர்கள் இருவரும் பொழிந்த காதலை பார்த்து பலரும் கடுப்பாகினர். இவர்களின் இந்த வீடியோவை பலரும் ட்ரோல் செய்து வீடியோ வெளியிட்டு இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் தரப்பில், கடலுார் குழந்தைகள் நல அலுவலகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையும் பாருங்க : உயிரோட இருக்கும் போது விட்ருங்க, செத்த உடனே டைலாக் உடுறீங்க – கி ரா மறைவுக்கு பிரியா பவானி போட்ட இரங்கல் பதிவை கேலி செய்த நபர். அவர் கொடுத்த பதிலடி.

- Advertisement -

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார், சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். பின் சிறுமியை மீட்டு, கடலுார் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், குட்டி வடிவேலுவிற்கும் போலீசார் அறிவுரை அளித்தனர். இப்படி ஒரு நிலையில் மீண்டும் இது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

சமீபத்தில் திரைப்பட பத்திரிகையாளர் ஆஷாமீரா, வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அந்த வீடியோவில் தற்போது இருக்கும் குழந்தைகளும் அப்போது இருந்த குழந்தைகளும் எப்படி இருந்தார்கள் என்ற வித்யாசத்தை உணர்த்துவது போல இருந்தது. இந்த வீடியோ வை பகிர்ந்த ஆஷாமீரா, இந்த சின்ன வயசிலேயே ஒரு பொண்ணு அடிக்கிறது சரின்னும், அதை தடுக்க இன்னொரு பையன் தான் வரணும்னு அவ்வளவு கேவலமா இதை ஒரு சாதாரண விஷயமாக பண்ணி வச்சிருக்கோம்ல என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நடிகை பிரியா ஆனந்த், இந்த வீடியோவில் பல விஷயங்கள் அருவருப்பாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். சமீபத்தில் தான் இது போல வீடியோ எல்லாம் சிறுவர்கள் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தியும் இன்னமும் சிலர் லைக்ஸ், வியூஸ்களுக்காக இப்படி செய்து வருவதை பார்த்து பல 90ஸ் கிட்ஸ்களுக்கும் வெந்த புண்ணில் வேளை பாச்சுவது போல தான் இருக்கும்.

Advertisement