உயிரோட இருக்கும் போது விட்ருங்க, செத்த உடனே டைலாக் உடுறீங்க – கி ரா மறைவுக்கு பிரியா பவானி போட்ட இரங்கல் பதிவை கேலி செய்த நபர். அவர் கொடுத்த பதிலடி.

0
1075
pbs
- Advertisement -

தமிழ் நவீன இலக்கியத்தின் அச்சாணிகளில் ஒருவரான கி.ராஜநாராயணன் நேற்று இரவு வயது மூப்பு காரணமாக காலமாகியுள்ள சம்பவம் கலையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழிலக்கியத்தில் கரிசல் வட்டாரத்திற்கு முக்கிய இடத்தைப் பெற்றுத் தந்தவர் கி.ராஜநாரயணன். இவர் ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், குறு நாவல்களை எழுதியுள்ளார். கி.ராஜநாராயணன் சாகித்ய அகாடமி விருது, தமிழக அரசின் விருது மற்றும் கனடா நாட்டின் உயரிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பாராட்டையும் பெற்றுள்ளார்.

-விளம்பரம்-

இவர் கரிசல் காட்டு இலக்கியத்தின் தந்தை என தமிழர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர். தனது 100வது பிறந்தநாளை நெருங்கிகொண்டு இருக்கும் வேளையில் இவர் நேற்று உடல் நலக் குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு பல்வேறு கலைத்துறை பிரபலங்களும் எழுத்தாளர்களும், கவிஞர்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் ப்ரியா பவானி சங்கரும் இவரது இறப்பு குறித்து இரங்கல் பதிவு ஒன்றை போட்டிருந்தார்.

- Advertisement -

அதில், கி.ராஜநாரயணன், தமிழ் பேசினா fine கட்டனும்னு class leader-அ பெயர் எழுத சொல்ற school-ல, we are trained and tamed to think in English for 14 long years. அப்படி ஒரு வாழ்க்கைமுறையில் ஒரு private librarian பரிந்துரையில் ‘கோபல்ல கிராமம்’ மூலம் அறிமுகமானவர் தான் கி.ரா அப்புறம் 14,15 வயதில், ‘வயது வந்தவர்களுக்கு மட்டும்’ அப்படிங்கற பேர் நம்மல impress பண்ண, ஒரு குறுகுறுப்புடன் அதை librarian கிட்ட வச்ச என்னை நினைச்சா எனக்கே சில சமயம் இப்படி இருக்கும்.

அதன் வழி கி்.ரா இன்னும் பரிச்சயமாகிறார். அவருடைய சிறுகதைகள் நான் வாழாத உலகத்தை மனசுல பதியவச்சுது. எழுத்தாளர்கள் என்றுமே மறைவதில்லை. இப்பவும் என்னை புன்னகைக்க வைக்கிறார். நிறைவான வாழ்க்கை என்று பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த ரசிகர் ஒருவர், உயிரோட இருக்கும் போது விட்ருங்க, செத்த உடனே டைலாக் விடுறீங்க பாரு முடியலடா என்று பதிவிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

அதற்கு பதில் அளித்த பிரியா பவானி சங்கர், நாளைலேர்ந்து உயிரோட இருகவரங்களுக்கும் அஞ்சலி செலுத்திடறோம்ங்க ஐயா என்று கூறியுள்ளார். அதே போல பிரியா பவானி சங்கர் தனது பதிவில், ராஜநாராயணன் என்று குறிப்பிடுவதர்க்கு பதிலாக ராஐநாராயணன் என்று குறிப்பிட்டு இருந்தார். இதனை ரசிகர் ஒருவர் சுட்டிக்காட்ட, இதை சுட்டிகாட்டியதற்கு நன்றி, . மன்னிக்கவும் **எழுத்துப்பிழை கி.ராஜநாராயணன் I don’t use eng to tamil phonetic keypad. தமிழ் keypad தான். பார்வை கோளாறு நினைக்கிறேன். Check பண்ணிடறேன் என்று கூறியுள்ளார்.

Advertisement