எவ்ளோ காஸ் கொடுத்தாலும் அந்த விளம்பரத்தில் நடிக்க மாட்டேன். பிரியா ஆனந்திற்கு குவியும் பாராட்டு.

0
48280
priya-anand
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பிரியா ஆனந்த். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். நடிகர் ஜெய் நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த “வாமனன்” என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் தமிழில் பல படங்களில் நடித்து உள்ளார். நடிகை பிரியா ஆனந்த் அவர்கள் முன்னணி நடிகையாக வரவில்லை என்றாலும் தமிழ் இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்து விட்டார். கடைசியாக
ஆர் ஜே பாலாஜி நடிப்பில் வெளிவந்த எல் கே ஜி என்ற படத்தில் பிரியா ஆனந்த் நடித்திருந்தார். தற்போது அம்மணிக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறார். இருப்பினும் இவர் தற்போது சுமோ என்ற படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்நிலையில் நடிகை பிரியா ஆனந்த் அவர்கள் ஃபேர்னஸ் சார்ந்த விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறி இருந்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில் பிரியா ஆனந்த் அவர்கள் கூறியது, நான் கண்டிப்பாக ஃபேர்னஸ் சம்மந்தமான விளம்பரத்தில் நடிக்க மாட்டேன். அதோடு நான் மாடலிங் கூட பண்ணது கிடையாது. எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. ஆனால், நான் அந்த வாய்ப்புகளை எல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். வெள்ளையாக இருப்பது தான் அழகு என்று சொல்லுவது ரொம்ப தப்பான விஷயம்.

- Advertisement -

இதையும் பாருங்க : குருவி, காக்காணு படம் எடுத்தாங்களே,ஓடுச்சா. கலாய்த்த சைக்கோ பட நடிகை.

நம்முடைய நம்பிக்கையும், தைரியமும் தான் நமது வெற்றிக்கு காரணம். தென்னிந்திய பெண்களின் முகத்தில் இருக்கும் கலையும், கண்ணில் இருக்கும் ஸ்பார்க்கும் எங்குமே இருக்காது. பாலிவுட்டில் ஒரு கலக்கு கலக்கியவர் ஸ்ரீதேவி. அவர் தென் இந்தியாவில் இருந்து சென்ற நடிகை தான். தற்போது பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கும் தீபிகா படுகோனும் தென் இந்தியாவில் இருந்து சென்றவர் தான். தென்னிந்திய பெண்களின் முகத்தில் இருக்கும் கலை வேறு எங்கும் கிடையாது.

-விளம்பரம்-

அதை விட்டுட்டு ஃபேர்னஸ் க்ரீம் போட்டால் தான் அழகு, வெள்ளை என்று சொல்லுவது என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஃபேர்னஸ் விளம்பரத்திற்காக பம்பையில் இருந்து ஒரு நடிகையை கொண்டு வந்து நடிக்க வைப்பது எல்லாம் என்னால ஏத்துக்க முடியாது. இதுக்காக எவ்வளுவு பணம் கொடுத்து இந்த மாதிரி நடிக்க சொன்னாலும் நான் நடிக்க மாட்டேன் என்று கூறினார்.

Advertisement