உடம்பை விற்று பிழைக்கணும்ன்னு அவசியம் எனக்கு கிடையாது- பிரியா பவானி சங்கரின் ஆவேச பேட்டி

0
470
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ப்ரியா பவானி சங்கர். முதலில் இவர் செய்தி வாசிப்பாளராக தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். அதன் மூலம் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாண முதல் காதல் வரை’ சீரியலில் நடித்தார். இந்த சீரியலின் வெற்றிக்குப் பிறகு இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தது. நடிகர் வைபவ் நடிப்பில் வெளிவந்த ‘மேயாத மான்’ எந்த படத்தின் மூலம் தான் ப்ரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

-விளம்பரம்-

அதற்குப்பின் இவர் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து மிகப் பிரபலமானார். அதை தொடர்ந்து இவர் மான்ஸ்டர், ஓ மணப்பெண்ணே, ருத்ரன், யானை, திருச்சிற்றம்பலம், ரத்தினம், இந்தியன் 2 போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். கடைசியாக இவர் நடித்த டிமான்டி காலனி 2 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான டிமான்டி காலனி முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இரண்டாம் பாகம் அமைந்தது.

- Advertisement -

பிரியா பவானி சங்கர் தகவல்:

முதல் பாகத்தில் இருக்கும் சஸ்பென்ஸ் மற்றும் விறுவிறுப்பும் இரண்டாம் பாகத்திலும் இருப்பதால் மக்கள் இப்படத்தை கொண்டாடி இருந்தார்கள். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் டெப்பி என்னும் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார். இதை அடுத்து இவர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, சமீப காலமாகவே பிரியா பவானி சங்கர் கிளாமர் உடையில் போட்டோ சூட் நடத்தி போடுகிறார். கிளாமராக நடிக்க தான் இப்படி எல்லாம் செய்கிறாரா? என்றெல்லாம் சோசியல் மீடியாவில் ஒரு தரப்பினர் கமெண்ட் போட்டு இருக்கிறார்கள்.

பிரியா பவானி சங்கர் பேட்டி:

இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் பிரியா பவானி சங்கர், என்னுடைய உடலை வித்து அதை ஒரு விற்பனை பொருளாக மாற்றி நான் வியாபாரம் செய்ய மாட்டேன். அது சரி, தவறு என்று விவாதத்திற்கும் நான் செல்லவில்லை. எனக்கு அதில் விருப்பமும் இல்லை. காரணம், நான் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும்போது நான் தவறான செயலை செய்தேனோ என்று வருத்தப்படக்கூடாது. அந்த விஷயத்தில் நான் கராராக இருக்கிறேன். முடிந்த வரைக்கும் அந்த மாதிரியான முடிவுகளை எடுக்கும்போது கவனமாக கையாளுகிறேன்.

-விளம்பரம்-

சர்ச்சைக்கு கொடுத்த பதிலடி:

ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தை எனக்கு தருகிறார்கள் என்றால் அதில் நடிப்பது மட்டும் தான் என்னுடைய வேலை. ஆனால், நான் படத்தில் ஒரு பாசிட்டிவான கதாபாத்திரமாக இருக்கும் போது இப்போது பேஷன் என்று கூறி தவறான ஒன்றை நான் பார்வையாளர்களுக்கு சொல்லமாட்டேன். என்னுடைய வாழ்க்கையிலும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றது. அந்த பக்கங்கள் தான் என்னை இன்று மனிதர்களிடமிருந்து விலக்கி ஒரு எல்லையை உருவாக்கி என்னை தற்காத்துக் கொள்ள பழகி இருக்கிறது.

சினிமா பயணம்:

அந்த இரண்டு பக்கங்கள் இல்லாமல் இருந்தால் நான் இப்படிப்பட்ட இடத்தில் உட்கார்ந்திருக்க மாட்டேன். எனக்கு இந்த சினிமாவில் உறுதுணையாக இருக்கிறார்கள் என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு யாருமே கிடையாது. என்னை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கும் யாருமே இல்லை. அதற்காக நான் இங்கு முழுக்க முழுக்க சுயமாக தான் வந்தேன் என்று சொல்ல முடியாது. நான் தொலைக்காட்சியில் இருந்து சீரியலுக்கு மாறியபோது முதல் நாள் சூட்டிங் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அப்போது என்னுடைய கேமரா மேன் எனக்கு பேல் பூரி வாங்கி கொடுத்து முதல் நாள் தானே பரவாயில்லை, பார்த்துக் கொள்ளலாம் என்று ஆறுதல் சொன்னார். இப்படி சின்ன சின்ன விஷயங்கள் எல்லாம் என்னுடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறது என்று ரொம்ப எமோஷனலாக பேசியிருக்கிறார்.

Advertisement