முதன் முறையாக லிப் – லாக் காட்சியில் பிரியா பவானி – வெளியானது Sj சூர்யாவின் பொம்மை ட்ரைலர்

0
3852
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னனி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ப்ரியா பவானி சங்கர். முதலில் இவர் செய்தி வாசிப்பாளராக தான் மக்கள் மத்தியில் அறிமுகமானார். அதன் மூலம் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற சீரியலில் நடித்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்தது. அதன் பின் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தது. நடிகர் வைபவ் நடிப்பில் வெளிவந்த மேயாதமான் என்ற படத்தின் மூலம் தான் ப்ரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

-விளம்பரம்-

பின் இவர் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து மிக பிரபலமானார். அதனை தொடர்ந்து இவர் நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளிவந்த படம் தான் “மான்ஸ்டர்”. இந்த படம் சூப்பர் ஹிட் கொடுத்தது. அதன் பின் ஹரிஷ் கல்யான், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் அறிமுக இயக்குனர் கார்த்திக் சங்கர் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் ‘ஓ மணப்பெண்ணே’. இதனை அடுத்து சமீபத்தில் அருண் விஜய்- ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் யானை படமும் சுமாராக ஓடியது.

- Advertisement -

பிரியா பவானி சங்கர் திரைப்பயணம்:

இந்த படத்தை இயக்குனர் ஹரி இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. பிரியா பவானி சங்கர் நடிக்கும் படங்கள்: சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த பத்து தல படத்தில் ப்ரியா நடித்து இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது ராகவா லாரன்ஸ், ப்ரியா பவானி சங்கர் நடித்த ருத்ரன் படம் வெளியாகி இருக்கிறது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

இப்படி ஒரு நிலையில் sj சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்துள்ள ‘பொம்மை’ படத்தின் ட்ரைலர் வெளியாகி இருக்கிறது. மான்ஸ்டர் படத்தை தொடர்ந்து தற்போது sj சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் ஜோடியாக நடித்து இருக்கும் இரண்டாம் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ராதா மோகன் இயக்கத்தில் எஸ் .ஜே .சூர்யா, பிரியா பவானி சங்கர், சாந்தினி தமிழரசன் ஆகியோர் நடிப்பில் இந்த படம் தயாராகி இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார் இந்த படம் வருகிற 16-ஆம் தேதி வெளியாக இருக்கிறது இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது டைலரிங் படி பொம்மைகள் மீது அதிக ஆசியுடன் இருக்கும் எஸ் ஜே சூர்யா அந்த பொம்மைகளுக்கு ஏதாவது ஒன்று நேர்ந்தால் ஆவேசமாகி விடுகிறார். அப்படி ஒரு கற்பனை உலகத்தில் அவர் வாழ்ந்து வரும் நிலையில் ஒரு கட்டத்தில் அது விபரீதத்தில் முடிகிறது.

அதை அடுத்து என்ன நடக்கிறது என்பதைப் போல இந்த படத்தின் டிரைலர் அமைந்திருக்கிறது.அதிலும் குறிப்பாக ட்ரைலரில் எஸ்.ஜே. சூர்யா மற்றும் ப்ரியா பவானி சங்கரின் லிப்லாக் காட்சிகளும் இடம் பெற்று இருக்கிறது. இதனை கண்டு ரசிகர்கள் பலரும் குடும்பபங்காக நடித்த ப்ரியா பவானி சங்கரா இப்படி லிப் லாக் காட்சிகள் நடித்திருக்கிறார் என்று வியந்து இருக்கிறார்கள்.

Advertisement