இளம் நடிகருடன் எடுத்துக்கொண்ட ஜிம் செல்பி.! வைரலாகும் பிரியா பவானி ஷங்கர் புகைப்படம்.!

0
14934
priya
- Advertisement -

புதிய தலைமுறை தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் விஜய் தொலைக்காட்சியில் சீரியல் நடிகையாக இருந்து வந்தவர் ப்ரியாபவானி ஷங்கர் . பின்னர் “மேயாதமான்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். கடைசியாக கார்த்திக் நடித்த “கடைக்குட்டி” சிங்கம் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-
priya-bhavani-2

கடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகளில் கமிட் ஆகிவரும் நடிகை பிரியா பவானி ஷங்கர் தற்போது அதர்வாவிற்கு ஜோடியாக கமிட் ஆகியுள்ளது ப்ரியா பவானி ஷங்கர் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே போல அருண் விஜய் நடித்து வரும் மாபியா படத்திலும் நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : வனிதா சொன்ன வார்த்தையால் மனம் நொந்து அழுத ஷெரின்.! 

- Advertisement -

பிரியா பவானி சங்கரும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் கவினும் காதலித்து பிரிந்துவிட்டதாக ஒரு வதந்தியும் பரவியது. ஆனால், இது குறித்து பிரியா பவானி சங்கர் எதுவும் வாய் திறக்கவில்லை. மாறாக தனது திரைப்பட பணிகளை படு பிஸியாக செய்து வருகிறார்.

அதே போல தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற் பயிற்சிகளையும் செய்து வருகிறார் பிரியா பவானி சங்கர். இந்த நிலையில் 96 படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த ஆதித்யா பாஸ்கருடன் ஜிம்மில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பிரியா பவானி சங்கர்.

-விளம்பரம்-
Advertisement