இந்தியன் 2க்கு அப்புறம் என்ன கேலி பண்றது பாக்கும் போது- இந்தியன் 2 தோல்வி குறித்து PBS

0
526
- Advertisement -

‘இந்தியன் 2’ படத்தின் தோல்விக்கு பிறகு தான் சந்திக்கும் கேலிகள் குறித்து நடிகை பிரியா பவானி சங்கர் அளித்துள்ள பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் இந்தியன் 2. இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கியிருக்கிறார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தை மீண்டும் இயக்குனர் சங்கர்- கமல் கூட்டணியில் எடுக்கப்பட்டது. இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, ஜெகன், பாபி சிம்ஹா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். இந்தப் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்தியன் பாகம் 1 படத்துக்கு கிடைத்த வரவேற்பு இந்தியன் 2 விற்கு கிடைக்கவில்லை. இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார்.

- Advertisement -

கேலிக்கு உண்டான பிரியா பவானி சங்கர்:

இந்தப் படம் வெளியானதிலிருந்து நடிகை பிரியா பவானி சங்கர் உடைய வீடியோக்கள் வெளியாகி நெட்டிசன்கள் கலாய்த்து இருந்தார்கள். அதாவது இந்தியன் 2 படத்தில் இடம்பெற்ற கதறல் என்ற பாட்டுக்கு ப்ரியா பவானி சங்கர் நடனமாடி இருந்தார். அந்த நடன வீடியோவை நெட்டிசன்கள் பதிவிட்டு கிண்டல் அடித்து மீம்ஸ் தெறிக்க விட்டார்கள். அதைப் பார்த்த ப்ரியா பவானி சங்கர், அடப்பாவிங்களா? இட்ஸ் ஜஸ்ட் PBS கதறல் என்று வேடிக்கையாக பதில் அளித்து இருந்தார்.

பிரியா பவானி சங்கர் பேட்டி:

சமீபத்தில் ஒரு பேட்டியில் இந்தியன் 2 படத்தின் தோல்விக்கு பிறகு தான் சந்திக்கும் விமர்சனங்கள் குறித்து இவர் பேசி இருந்தார். அதில், இந்தியன் 2 படத்தில் நடிக்க நான் சைன் பண்ணதால எனக்கு நிறைய பெரிய பட ஆஃபர்கள் கிடைத்தது. நான் சைன் பண்ண முதல் பெரிய படம் ‘இந்தியன் 2’ என்று தான் நினைக்கிறேன். ஆனால், ஆல்ரெடி ‘கடைக்குட்டி சிங்கம்’ படமும் நான் பண்ணி இருக்கேன். நான் படத்தில் ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக போராடுவது கிடையாது. எனக்கு அப்போ ஹீரோ கூட டூயட் பாடினா தான் ஹீரோயின்னு எனக்கு அப்போ தெரியாது. அந்தப் படத்தில் எனக்கு என்ன கதாபாத்திரம், என்ன ரோல் என்பது தான் நான் பார்த்தேன். ஆனால், கடைக்குட்டி சிங்கம் படத்தில்நடித்ததற்காக எனக்கு கிடைத்த வரவேற்பு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

-விளம்பரம்-

இந்தியன் 2 தோல்வி குறித்து:

அதற்க்கு பிறகு ரெண்டு மூணு படங்களில் ஹீரோயின் ஆக பண்ண வாய்ப்பு கிடைத்தது. அதுதான் நான் சொல்றேன் பெரிய படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தால்தான் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கிறது. இப்போ எனக்கு ‘இந்தியன் 2’ வாய்ப்பு கொடுத்தால் கூட ஏற்றுக்கொள்வேன். இப்போ நம்மளுக்கு அந்த படத்தினுடைய வரவேற்பு எப்படி இருக்கு என்பது தெரியும். எல்லாரும் என்னை இப்போ கடுமையாக விமர்சனம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. அது எனக்கு ரொம்ப கஷ்டமாகத்தான் இருக்கு. அனால், இப்போ நடந்ததை நாம் எதுவும் மாற்ற முடியாது. ‘இந்தியன் 2’ மாதிரி பெரிய படத்தில் நடிக்க எந்த ஃபீமேல் ஆர்ட்டிஸ்ட்ம் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்.

ரொம்ப கஷ்டமாக இருக்கு:

என்னால வேணும்னா மக்களுக்கு படம் பிடிக்காததற்காக சாரி சொல்ல முடியும். கமல் சார் மாதிரி பெரிய ஹீரோக்கள் நடிக்கிற எல்லா படமும் நம்ம நினைக்கற மாதிரி ஹிட் கொடுப்பது கிடையாது. அதுக்காக நம்ம ஒக்காந்து அதை பத்தி யோசிக்காம , அடுத்து மக்களுக்கு பிடிக்கிற மாதிரி என்ன பண்ணலாம் என்று தான் யோசிக்கணும். நான் மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், திருச்சிற்றம்பலம் போன்ற பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறேன். அப்போதெல்லாம் உன்னால தான் இந்த படம் ஹிட் அச்சுனு யாரும் சொன்னது கிடையாது. அதை நான் எதிர்பாக்கவும் இல்லை. ஆனால், ஹிட் ஆகலனா அது என்னால தான் சொல்லும்போது கொஞ்சம் கஷ்டமாக இருக்கு என்று வருத்தப்பட்டு பேசியிருக்கார்.

Advertisement