இந்தியன் 2க்கு கூட இப்படி பண்ணலயே, டிமான்டி காலனி 2 வெற்றியால் மகிழ்ச்சி வெள்ளத்தில் PBS

0
365
- Advertisement -

சமீபத்தில் வெளியான ‘டிமான்டி காலனி 2’ படத்திற்கு கிடைக்கும் நல்ல வரவேற்புக்கு பிறகு நடிகை ப்ரியா பவானி சங்கர் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது சோசியல் மீடியாவில் வரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் ப்ரியா பவானி சங்கர். முதலில் இவர் செய்தி வாசிப்பாளராக தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். அதன் மூலம் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாண முதல் காதல் வரை’ சீரியலில் நடித்தார். இந்த சீரியலின் வெற்றிக்குப் பிறகு இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தது.

-விளம்பரம்-

நடிகர் வைபவ் நடிப்பில் வெளிவந்த ‘மேயாத மான்’ எந்த படத்தின் மூலம் தான் ப்ரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அதற்குப்பின் இவர் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து மிகப் பிரபலமானார். அதை தொடர்ந்து இவர் மான்ஸ்டர், ஓ மணப்பெண்ணே, ருத்ரன், யானை, திருச்சிற்றம்பலம், இந்தியன் 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு பிறகு இவர் நடித்த படங்கள் எதுவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

- Advertisement -

இந்தியன் 2:

குறிப்பாக இவர் இயக்குனர் சங்கர் மற்றும் நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் சமீபத்தில் வெளியான ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் வெளியானதிலிருந்து நடிகை ப்ரியா பவானி சங்கர் உடைய வீடியோக்கள் வெளியாகி நெட்டிசன்கள் கலாய்த்து இருந்தார்கள். அதாவது, இந்தியன் 2 படத்தில் இடம்பெற்ற கதறல் என்ற பாட்டுக்கு ப்ப்ரியா பவானி சங்கர் நடனமாட இருந்தார். அந்த நடன வீடியோவை நெட்டிசன்கள் பதிவிட்டு கிண்டல் அடித்து மீம்ஸ் தெறிக்க விட்டார்கள். மேலும், இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் தோல்வி அடைவதால் இவரை ராசி இல்லாத நடிகை என்பது போல் பேசி வந்தார்கள்.

ப்ரியா பவானி சங்கர் வருத்தம்:

சமீபத்தில் கூட ஒரு பேட்டியில் இந்தியன் 2 படத்தின் தோல்வி குறித்து இவர் பேசியிருந்தார். அதில், இந்தியன் 2 மாதிரி பெரிய படத்தில் நடிக்க எந்த ஆர்டிஸ்ட்டும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். என்னால் வேணும்னா மக்களுக்கு படம் பிடிக்காததற்காக சாரி சொல்ல முடியும். நான் மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், திருச்சிற்றம்பலம் போன்ற பல படங்கள் நடித்திருக்கிறேன். அப்போதெல்லாம் உன்னால்தான் இந்த படம் ஹிட் ஆச்சுன்னு யாரும் சொன்னது கிடையாது. ஆனா, ஹிட் ஆகலனா அது என்னால தான் சொல்லும் போது கொஞ்சம் கஷ்டமாக இருக்கு என்று வருத்தமாக பேசி இருந்தார்.

-விளம்பரம்-

டிமான்டி காலனி:

இந்நிலையில் ப்ரியா பவானி சங்கர் நடித்திருக்கும் டிமான்டி காலனி 2 திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான டிமான்டி காலனி முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இரண்டாம் பாகமும் அமைந்துள்ளது. முதல் பாகத்தில் இருக்கும் சஸ்பென்ஸ் மற்றும் விறுவிறுப்பும் இரண்டாம் பாகத்திலும் இருப்பதால் மக்கள் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்த படத்தில்ரியா பவானி சங்கர் டெப்பி என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் இப்படத்தில் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் நடிப்பில் அசத்தியுள்ளார்.

ப்ரியா பவானி சங்கர் பதிவு:

தற்போது ‘டிமான்டி காலனி 2’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இவர், வெள்ளை நிற ஆடைகள் அணிந்திருக்கும் புகைப்படங்களோடு அமைதி (Peace) என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்பதிவின் மூலம் தொடர் தோல்வியால் மன உளைச்சலுக்கு ஆளான பிரியா பவானி சங்கர் தற்போது டிமான்டி காலனி 2 படத்தின் வெற்றிக்கு பிறகு ஆறுதல் அடைந்துள்ளார் என்று தெரிகிறது. அது மட்டும் இல்லாமல், இப்படம் குறித்து வரும் பதிவுகளை ப்ரியா பவானி சங்கர் ரீட்வீட் செய்து வருகிறார். ஆனால், இந்தியன் 2 படத்திற்கு கிடைத்த விமர்சனங்களை இவர் ரீ ட்வீட் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement