காதலனுக்கு பிடிக்காது என்று தெரிந்தும் அவரின் பிறந்த நாளில் அந்த புகைப்படத்தை பதிவிட்டு வெறுப்பேற்றிய பிரியா பவானி ஷங்கர்.

0
834
Priya
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னனி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். முதலில் இவர் செய்தி வாசிப்பாளராக தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். அதன் மூலம் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் நடித்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்தது. மேலும், இதன் மூலம் தான் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தது. நடிகர் வைபவ் நடிப்பில் வெளிவந்த மேயாதமான் என்ற படத்தின் மூலம் தான் ப்ரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

-விளம்பரம்-

பின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து மிக பிரபலமானார் ப்ரியா பவானி சங்கர். அதனை தொடர்ந்து இவர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி, வெங்கடேசன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வெளிவந்த படம் தான் “மான்ஸ்டர்”. மான்ஸ்டர் திரைப்படம் வெளியாகி ஹிட் கொடுத்தது என்று சொல்லலாம். சமீபத்தில் ஹரிஷ் கல்யான், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஓ மணப்பெண்ணே’ திரைப்படம் ஹாட் ஸ்டார் Ott தளத்தில் வெளியாகி இருந்தது.

- Advertisement -

பிரியா பவானி சங்கர் நடிக்கும் படங்கள்:

இந்த படத்தில் அபிஷேக் குமார், அன்புதாசன், அனிஷ் குருவில்லா, குக்கு வித் கோமாளி அஸ்வின், கே எஸ் ஜி வெங்கடேஷ் போன்ற பலர் நடித்து உள்ளார்கள். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது ப்ரியா பவானி சங்கர் அவர்கள் யானை, குருதி ஆட்டம், ருத்ரன், திருச்சிற்றம்பலம் போன்ற பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் பிரியா பவானி சங்கர் தன் காதலன் பிறந்தநாளை முன்னிட்டு சமூகத்தில் வாழ்த்து செய்தி ஒன்று பகிர்ந்திருக்கிறார்.

பிரியா பவானி சங்கர் காதலர்:

தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. நடிகை பிரியா பவானி சங்கர் கடந்த பத்து வருடங்களாக ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவர்களுடைய காதல் குறித்து பலரும் சோசியல் மீடியாவில் கேட்டு வருகிறார்கள். ஆனால் நீண்ட நாட்கள் அமைதி காத்த பிரியா பவானி சங்கர் சமீபத்தில் தான் தன்னுடைய காதலரை ரசிகர்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் பிரியா பவானி சங்கர் அறிமுகப்படுத்தினார்.

-விளம்பரம்-

பிரியா பவானி சங்கர் பதிவிட்ட பதிவு:

இந்நிலையில் அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு தன் காதலுடன் இருக்கும் புகைப்படத்தை ஒன்றை பிரியா பவானி சங்கர் பதிவிட்டு அதில் அவர் கூறியிருப்பது, நீ ஒரு மோசமான டீன்ஏஜ் பையனாக இருந்து இப்போது ஒரு அற்புதமான மனிதனாக மாறி விட்டாய். நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி. புன்னகை, சாகசங்கள், அன்பு, நட்பு, அமைதி, ஆரோக்கியம் என அனைத்தும் உனக்கு கிடைக்க வாழ்த்துகிறேன். நான் வெளியிட்டுள்ள புகைப்படம் உனக்கு பிடிக்காது என்று எனக்கு தெரியும்.

வைரலாகும் பிரியா பவானி சங்கர் பதிவு:

அதனால் தான் இதை பகிர்ந்தேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். இப்படி பிரியா பவானி சங்கர் பதிவிட்ட பதிவும் புகைப்படமும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துக் கூறியது மட்டுமல்லாமல் உங்களுடைய திருமணம் எப்போது என்று கேட்டு வருகிறார்கள். அதோடு பிரியா பவானி சங்கரின் அடுத்த படம் ரிலீஸ் குறித்து கேட்டு வருகிறார்கள்.

Advertisement