டெய்லி இப்படி எழுந்து ட்ரஸ் பண்ணி, மேக்கப் போட்டு போஸ் கொடுக்கறது போர் அடிக்கல – ரசிகரின் கேள்விக்கு பிரியா பவானி ஷங்கர் கொடுத்த பதில்.

0
2118
- Advertisement -

தொலைக்காட்சியில் இருந்து பல்வேறு நடிகர் நடிகைகள் தற்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டு வருகின்றனர். அந்த வகையில் புதிய தலைமுறை தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் விஜய் தொலைக்காட்சியில் சீரியல் நடிகையாக இருந்து வந்தவர் ப்ரியாபவானி ஷங்கர் .பின்னர் “மேயாதமான்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் பல்வேரு படங்களில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

பொதுவாக நடிகைகள் பலரும் அடிக்கடி பல போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி ஷங்கரும் சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இதையும் பாருங்க : யாரும் பயப்பட வேண்டாம், இது புது பேஷனாம். பொது நிகழ்ச்சிக்கு வந்த பிரபல நடிகை – (பாத்தா, அட இவரான்னு கேப்பீங்க)

- Advertisement -

அதில் ‘திங்கள் கிழமையாக இருந்தாலும் வெள்ளிக்கிழமை போல இருங்கள்’ என்று கேப்ஷனையும் போட்டு இருந்தார். பொதுவாக வேலைக்கு செல்லும் பலரும் வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை கொஞ்சம் கடுப்போடு தான் வேலைக்கு செல்வார்கள். அதே போல வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் இரண்டு நாட்கள் விடுமுறையை நினைத்து கொஞ்சம் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதனை குறிப்பிட்டு தான் பிரியா பவானி ஷங்கர் இப்படி ஒரு கேப்ஷனை போட்டார்.

பிரியா பவானி ஷங்கரின் இந்த பதிவை பலர் லைக் செய்தாலும் ஒரு சில நெகட்டிவ் கமன்ட் போடத் தான் செய்தனர். அந்த வகையில் ட்விட்டர் வாசி ஒருவர் ” என்று கேள்வி கேட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த பிரியா பவானி ஷங்கர் ‘நீங்கள் சொல்வது முழுமையாக புரிகிறது, என்னுடைய பதில் என்னவென்றால் கண்டிப்பாக எனக்கு போர் அடிக்காது. செய்யும் வேலைக்கு கைநிறைய சம்பளம் கிடைக்கும் போது அப்படி இருக்காது’ என்று பதில் அளித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement