10 வருட காதல் – காதலரின் பிறந்தநாளில் பழைய புகைப்படத்தை வெளியிட்டு உருக்கமான வாழ்த்தை சொன்ன பிரியா பவானி சங்கர்.

0
2173
priya
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னனி நடிகையாக வளர்ந்து வரும் நடிகை ப்ரியா பவானி சங்கர். முதலில் இவர் செய்தி வாசிப்பாளராக தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் நடித்தார். இதன் மூலம் தான் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தது.மேயாதமான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். பின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து உள்ளார். நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வெளிவந்த படம் தான் “மான்ஸ்டர்”. மான்ஸ்டர் திரைப்படம் வெளியாகி ஹிட் கொடுத்தது என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

கடந்த சில காலமாகவே பிரியா பவானி சங்கர் ராஜவேல் என்பவரை காதலித்து வருவதாக சமூக வலைத்தளத்தில் அடிக்கடி கிசுகிசுக்கப்பட்டது.ராஜவேல் பிறந்தநாளின்போது பிரியா பவானி சங்கர் ஒரு நீண்ட கவிதையை எழுதி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். குறிப்பாக அந்தப் பதிவில் நீ, நான் கேட்க மறந்த இசை. காயங்களை மறக்க புதிய காதலின் கிளர்ச்சி தேவையில்லை, சூழ்நிலைக்கு மாறாத அன்பு போதும் என்றிருக்கும் பேராண்மை.

இதையும் பாருங்க : சூர்யா படத்தில் கமிட் ஆன ரம்யா பாண்டியன் – அவரே வெளியிட்ட மாஸ் தகவல். ஆனால், ஒரு வருத்தம்.

- Advertisement -

எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தா அவள் வாழ்க்கைல உன்னை மாதிரி ஒரு ஆண் இருக்கனும்னு நான் கடவுளை கேட்டுக்கறேன். நட்சத்திரங்கள் நிறைந்த என்னுடைய உலகத்தில் என்றும் நீ ஒரு சூரிய ஒளியாக இருப்பாய் என்று மிகவும் உருக்கமாக பதிவிட்டிருந்தார். அதே போல பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரியா பவானி சங்கர் இதுகுறித்து தெரிவிக்கையில், என்னுடைய கல்லூரியில் ஆரம்பித்து இப்போது வரை நான் சொல்லுகிறேன் என்னிடம் அளவுக்கு மீறிய அன்பை ஒரு நபர் காண்பிக்கிறார் என்றால் அது அவர்தான்.

என்னுடைய தந்தைக்கு நிகராக என்னை பார்த்துக் கொள்ள முடியும், உன்னுடன் இருக்க முடியும் என்றாள் அது அவர்தான் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இன்று தனது காதலரின் பிறந்தநாளையொட்டி தனது காதலருடன் 10 வருடத்திற்கு முன்னர் எடுத்த புகைப்படத்தையும் தற்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்து, இந்த 10 ஆண்டுகளில் வாழ்க்கை மாறிவிட்டது. ஆனால், நம் இருவருக்கும் உள்ள பிணைப்பு மாறவில்லை. பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement