செய்தி தொகுப்பாளராக இருந்து பின்னர் ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற தொடரின் மூலம் இல்லத்தரசிகள் மத்தியிலும் இளசுகள் மத்தியிலும் பிரபலமடைந்தவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். இவர் தற்போது தனது காதலை உறுதி செய்துள்ளார்.
சீரியலுக்கு பின்னர் ‘மேயாதமான்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்தார் பிரியா பவானி ஷங்கர். தனது முதல் படமே வெற்றிப்படமாக அமைந்தது அவருக்கு மேலும் பிரபலத்தை ஏற்படுத்தியது. இதனால் இவருக்கு கடைக்குட்டி சிங்கம் படத்திலும் வாய்ப்பு கிடைத்தது.
இதையும் படியுங்க : பிரியா பவானி ஷங்கரின் காதலன்.! ரகசியத்தை போட்டுடைத்த எஸ் ஜே சூர்யா.!
தற்போது எஸ் ஜே சூர்யாவுடன் ‘மான்ஸ்டர்’ படத்திலும் நடித்து வருகிறார். பிரியா பவானி ஷங்கர் நீண்ட வருடங்களாக ஒருவரை காதலித்து வருகிறார் என்று ஒரு தகவல் வலம் வந்து கொண்டே இருந்தது. அதனை சமீபத்தில் எஸ் ஜே சூர்யா சூர்யாவும் , பிரியா பவாணி ஷங்கர் பங்குபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மறைமுகமாக உறுதி செய்தார் எஸ் ஜே சூர்யா.
இந்நிலையில் பிரியா தனது காதலர் ராஜ் வேலுவின் பிறந்த நாளை சமீபத்தில் வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளார். அதன் போட்டோக்களை வெளியிட்ட அவர், எல்லாரும் என்னை விட்டு போகும் போது நீ மட்டும் ஏன் எல்லாத்தையும் எனக்காக விட்டு கொடுக்கிறாய் என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இவர்கள் இருவரது காதலும் உறுதியாகியுள்ளது. அதே போல இந்த பதிவின் கமெண்ட்டிலும் ஒருவர், இன்னும் நீங்கள் அவரை காதல்கிறீங்களா ? பிரியவில்லையா என்று கமெண்ட் செய்துள்ளார்.