ஆம், நான் சிகரேட் பிடிச்சது உண்மை தான்.! பிரியா வாரியரின் பேச்சால் சர்ச்சை.!

0
942
Priya-varrier
- Advertisement -

ஒரு ஆதர் லவ் என்ற ஒரே ஒரு படத்தின் மூலம் உலகளவில் பிரபலமடைந்தவர் நடிகை ப்ரியா வாரீர். தற்போது ஸ்ரீதேவி பங்களா என்ற புதிய இந்தி படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

-விளம்பரம்-

ஸ்ரீதேவியின் வாழக்கை வரலாற்றில் நடிக்கும் பிரியா வாரீர் ட்ரைலரில் மது பிடித்தல், குறைவான அடையில் நடித்தல் போன்ற காட்சிகள் இடம்பெற்றது. மேலும், ஸ்ரீதேவி குளியல் தொட்டியில்ரத்த வெள்ளத்தில் கிடப்பதுபோல காட்சிகளும் இடம் பெற்றது. ப்ரியா வாரீயர் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிப்பதை பலரும் எதிர்த்து வந்தனர். 

- Advertisement -

மேலும், ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், இந்த படத்தின் தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த படத்தின் இயக்குனருக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பினார். ஆனால், படத்தின் இயக்குனரோ ஸ்ரீதேவி என்ற பெயர் நடிகை ஸ்ரீதேவிக்கு மட்டும் தான் சொந்தமா நான் தலைப்பை மாற்ற மாட்டேன் என்று கூறியிருந்தார்.

இந்த படத்தின் பிரச்சனை இப்படி போய் கொண்டிருக்க சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரியா, இந்த படத்தின் சர்ச்சையான காட்சிகள் குறித்து விளக்கமளிக்கையில், புகைப்பிடிக்கும் போது எனக்கு பிடித்த ப்ளேவர் சிகரெட்டை யூஸ் செய்தேன். மது அருந்தும் காட்சிகளில் வெறும் கிரேப் ஜூஸ் தான் குடித்தேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement