‘வெளிய ஒக்காந்து சாப்பிட்டேன்’ – மும்பையில் உள்ள பிரபல ஹோட்டலில் அவமானப்படுத்தப்பட்டுள்ள பிரியா வாரியர்.

0
704
Priya
- Advertisement -

மும்பையில் உள்ள மிகப் பிரபலமான ஹோட்டலில் நடிகை பிரியா வாரியரை கொடூரமாக நடத்திய சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவர் மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் கேரளா திருச்சூரில் பிறந்தவர். ஒரே ஒரு கண்ணசைவின் மூலம் ஒரே இரவுவில் இந்தியா முழுவதும் பிரபலம் ஆனவர் ப்ரியா பிரகாஷ் வரியர். 2019ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த படம் தான் ஒரு ஆதார் லவ். அந்த படத்தில் இடம்பெற்ற மாணிக்க மலராயா பூவி என்ற பாடலில் வரும் காட்சியில் ஒரு வரிக்கு இவர் நாயகனைப் பார்த்து கண்ணடிப்பார். இவர் கண்ணடிக்கும் காட்சி இந்திய அளவில் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாகியது.

-விளம்பரம்-

ஒரு ஒரே ரியாக்க்ஷன் மூலம் உலகளவில் புகழ்பெற்றார். அதோடு அப்போது இந்திய இளைஞர்களின் லெட்டஸ்ட் நாயகியே இவர் தான் இருந்தார். மேலும், இளைஞர்களின் பேஸ்புக், வாட்சப், இன்ஸ்டாகிராம் என எங்கு பார்த்தாலும் இந்த அழகு கன்னியின் வீடியோ தான். அதற்குப்பின் இவர் ஹிந்தியில் ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் நடித்திருக்கிறார். பின் கன்னட மொழியில் கிரீக் லவ் ஸ்டோரி என்ற படத்தில் நடித்திருக்கிறார். தெலுங்கில் லவ்வர்ஸ் டே என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் பிரியா வாரியர் :

இப்படி பிரியா பிரகாஷ் வாரியர் பல மொழிகளில் நடித்திருந்தாலும் தமிழில் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தெலுங்கில் நடிகர் நிதினுக்கு ஜோடியாக நடித்த பிரியா வாரியர் செக் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது இவர் நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீதேவி பங்களா என்னும் பெயரில் உருவாகியுள்ள இந்த திரைபடத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், ஸ்ரீதேவியாக நடித்திருக்கும் பிரியா வாரியர் ஓரிரு காட்சிகளில் நிர்வாணமாக நடித்துள்ளாராம்.

பிரியா வாரியர் படத்தில் நடித்து உள்ள காட்சி:

இதற்கு பலரும் விமர்சித்து கருத்து போட்டு இருந்தார்கள். அதோடு இவர் ஸ்ரீதேவியின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். தான் அடிக்கடி நடத்தும் போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். அதிலும் சமீபகாலமாக இவர் பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை பிரியா வாரியர் சமீபத்தில் மும்பையில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு சென்றிருக்கிறார்.

-விளம்பரம்-

பிரியா வாரியருக்கு மும்பையில் உள்ள ஹோட்டலில் நடந்தது:

அங்கு அவரை மிகவும் கொடூரமாக நடத்தப்பட்ட சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இது குறித்து பிரியா வாரியர் கூறி இருப்பது, மும்பையில் ferngoregaon என்ற இந்த பணக்கார ஹோட்டல் மிகவும் புத்திசாலித்தனமான கொள்கையைக் கொண்டுள்ளது. இதனால் ஹோட்டலுக்குள் வெளி உணவு அனுமதிக்கப்படாது. இதனால் ஹோட்டலில் தங்கும் விருந்தினர்கள் நாள் முழுவதும் எந்த உணவை ஆர்டர் செய்தாலும் அவர்களுக்கு கூடுதல் பணம் கிடைக்கும். இந்தக் கொள்கையைப் பற்றி எனக்குத் தெரியாது. வேலை முடிந்து திரும்பும் வழியில் எனக்கு உணவு கிடைத்தது.

கட்டாயப்படுத்திய ஹோட்டல் நிர்வாகிகள்:

பதிவு செய்தல் மற்றும் முன்பதிவு ஆகியவை தயாரிப்பு நிறுவனங்களால் செய்யப்படுகின்றனவே தவிர நடிகர்களால் அல்ல என்பதை மறந்துவிடாதீர்கள். காசு கொடுத்து வாங்கிய உணவு என்பதாலும் , அதைத் தூக்கி எறிய விரும்பவில்லை என்பதால், இந்த முறை மன்னிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொண்டேன். ஆனால், அவர்கள் உணவை வெளியில் வைத்துவிட்டுங்கள் அல்லது அதைக் குப்பையில் கொட்டச் சொன்னார்கள். இது மிகவும் மரியாதையற்ற மற்றும் மோசமான விருந்தோம்பல் என்று வேதனையையும் ஆதங்கத்தையும் தெரிவித்து இருக்கிறார். ஆனால், ஹோட்டல் நிர்வாகம் அதை கண்டுகொள்ளவில்லை. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement