இவங்களும் ஆரம்பிச்சிட்டாங்க – பிரியா வாரியர் கொடுத்த கிளாமர் போஸ். குவியும் லைக்ஸ்.

0
10063
priya
- Advertisement -

மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற படத்தில் புருவத்தை தூக்கி காட்டி செய்ததன் மூலமாக உலகம் முழுதும் ஒரே இரவில் ட்ரெண்டிங்கில் வந்த நடிகை தான் பிரியா வாரியர். ஒரு அடார் லவ் படத்தில் இவர் காட்டிய முக பாவனைகள் சடசடவென உலகம் முழுவதும் பரவி வரை இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுத் தந்தது. சமூக வளைதளத்தில் மட்டும் இவரை 70 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள். ஒரு அடார் லவ் படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு பாலிவுட் படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

ஒரு ஆதார் லவ் மூலம் புகழின் உச்சியில் இருந்த பிரியா வாரியர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறாக எடுக்கப்பட்ட ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடித்த பிரியா வாரியர் மோசமான ஆடைகளிலும் நடித்திருந்ததால் ஸ்ரீதேவியை அவதூறு செய்வது போல் இருக்கிறது என்று ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

- Advertisement -

இதனால் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதேபோல ஒரு அடார் லவ் படத்திலேயே லிப் லாக் காட்சியில் நடித்திருந்த பிரியா வாரியர், ஸ்ரீதேவி பங்களா படத்தில் நீச்சல் உடையிலும், தண்ணி அடிக்கும் காட்சிகளிலும், புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதே போல சமீபத்தில் சில நாட்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தை கூட முடக்கி இருந்தார்.

மேலும், தான் விளம்பரம் தேடுவதற்காக இன்ஸ்டாகிராமில் இருப்பதாக சொன்னது தன்னை காயப்படுத்தியதாக கூறி இருந்தார். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் இன்ஸ்டாவில் இணைந்த பிரியா வாரியார் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதற்கும் லட்சக் கணக்கில் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

-விளம்பரம்-
Advertisement