ஒரு நாளைக்கு இத்தனை லட்சமா ! ஒரு விடியோவால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ப்ரியா

0
620
priya prakash varrier

நடிகர் நடிகைகளை வைத்து பொருட்களை விளம்பரப்படுத்துவது சாதாரண விஷயம் தான்.ஆனால் ஒரு ஒரே வீடியோவில் வந்த ரியாக்க்ஷன் மூலம் உலகளவில் புகழ்பெற்றவர் கேரளத்து நடிகை ப்ரியா வாரியர்.அந்த வீடியோவிற்கு பின்னர் ட்விட்டர் ,பேஸ்புக் சமூக வலைததளத்தில் பெரும் பிரபலமடைந்தார் பிரியா வாரியர்.

Priya-Prakash-Varrier

ஒரே நாளில் அதிகம் தேடப்பட்டு பிரபலம் என்ற சாதனையும் புரிந்தார். தற்போது இன்ஸ்டாகிராமில் மட்டும் இவருக்கு 50 லட்சம் ரசிகர்கள் உள்ளனர். அதனை பயன்படுத்தி தற்போது சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டார்.

பல நிறுவனங்களின் பொருட்களை தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டு அந்த பொருட்களை பிரபலப்படுத்தி வருகிறார்.இதற்காக ஒரு பதிவிற்கு மட்டும் 8 லட்சம் ரூபாய் வாங்குகிறார் பிரியா வாரியர்.விளம்பரங்களில் நடித்தால் கூட இவ்வளவு சம்பாதிக்க முடியாது ஆனால் வெறும் ஒரு வீடியோ மூலம் பிரபலமான காரணத்தால் ஒரு பதிவிற்கு மட்டும் இவ்வளவு சம்பளமா என்று பலரும் வியந்துள்ளனர்.