உனக்கு அது இருந்தால் இப்படி வா ? அவதூறாக கமன்ட் செய்த நெட்டிசனுக்கு கிரீன் ஷாட்டை போட்டு பிரியா வாரியர் சவால்.

0
962
priya
- Advertisement -

மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற படத்தில் புருவத்தை தூக்கி காட்டி செய்ததன் மூலமாக உலகம் முழுதும் ஒரே இரவில் ட்ரெண்டிங்கில் வந்த நடிகை தான் பிரியா வாரியர். ஒரு அடார் லவ் படத்தில் இவர் காட்டிய முக பாவனைகள் சடசடவென உலகம் முழுவதும் பரவி வரை இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுத் தந்தது. சமூக வளைதளத்தில் மட்டும் இவரை 70 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள். ஒரு அடார் லவ் படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு பாலிவுட் படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

ஒரு ஆதார் லவ் மூலம் புகழின் உச்சியில் இருந்த பிரியா வாரியர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறாக எடுக்கப்பட்ட ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடித்த பிரியா வாரியர் மோசமான ஆடைகளிலும் நடித்திருந்ததால் ஸ்ரீதேவியை அவதூறு செய்வது போல் இருக்கிறது என்று ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதையும் பாருங்க : 20 வயதில் ‘Adjustment’ பண்ண சொன்னாங்க, நான் என் மேனேஜரிடம் பேசிக்க சொன்னேன். ஆனா, அதுக்கப்புறம் தான் தெரிஞ்சது – ரெஜினா

- Advertisement -

இதனால் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதேபோல ஒரு அடார் லவ் படத்திலேயே லிப் லாக் காட்சியில் நடித்திருந்த பிரியா வாரியர், ஸ்ரீதேவி பங்களா படத்தில் நீச்சல் உடையிலும், தண்ணி அடிக்கும் காட்சிகளிலும், புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. சமூக வலைதளத்தில் இவருக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவு ஹேட்டர்ஸ்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

இப்படி ஒரு நிலையில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு நெட்டிசன் ஒருவர் தொடர்ந்து அவதூறாக கமன்ட் செய்து வந்தார். அந்த நபரின் இன்ஸ்டாகிராம் ஐடியை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பகிர்ந்த பிரியா வாரியர், இந்த ஜென்டில்மென்/ வுமன் பற்றி தெரிந்துகொள்ள ஒரு நிமிடத்தை ஒதுக்குங்கள். ஏன் நீ உன்னுடைய உண்மையான ஐடியில் இருந்து வரமாட்ற ? தைரியம் இல்லையா ? என்று சவால் விட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement