எங்க போனாலும் அப்படி செய்ய சொல்றாங்க, இனிமே அப்படி பண்ண மாட்டேன் – பிரியா வாரியர்

0
1251
Priya-Varrior
- Advertisement -

உலகம் முழுதும் ஒரே இரவில் ட்ரெண்டிங்கில் வந்த நடிகை ஒரே பிரியா வாரியர். தன் கண் புருவத்தை தூக்கி காட்டி செய்ததன் மூலமாகவே ரசிகர்களை தன் பக்கம் கவனித்தார். மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியா வாரியர். இந்த ஒரு அடார் லவ் படத்தில் இவர் காட்டிய குட்டி குட்டி குயூட் ரியாக்சன் மூலம் சடசடவென உலகம் முழுவதும் பேமஸ் ஆகி விட்டார். சமூக வளைதளத்தில் மட்டும் இவரை 70 லட்சம் பேருக்கு மேல் பாலோ செய்கிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த ஒரு அடார் லவ் படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்றே சொல்லலாம். இருந்தாலும் இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு இந்த படம் வெற்றி பெறவில்லை. இருப்பினும் அம்மணிக்கு பாலிவுட் வரை வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

இது ஒருபுறம் இருக்க கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை பிரியா வாரியர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடுக்கவுதாக அறிவித்து தனது ரசிகர்களுக்கு சாக் கொடுத்தார். இந்த நிலையில் இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வந்த பிரியா வாரியர் கேலிகளுக்கு கூட கவலைப்படவில்லை. ஆனால், நான் பிரபலத்திற்காக பதிவுகளை போடுகிறேன் என்று கமன்ட் என்னை மிகவும் காயப்படுத்தியது அதனால் தான் கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்டேன் என்று கூறியிருந்தார்.

மேலும், , இது எனது தொழில்முறை இடம் என்பதால், நான் திரும்பி வந்துள்ளேன் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரியா வாரியர், நான் முழு நேர நடிகையாகிட்டேன். ஆனால், எப்போதும் எங்க போனாலும் கண் அடிச்சுக் காட்டச்சொல்லி கேட்டுக்கிட்டே இருக்காங்க. எனக்கு இது ரொம்ப போர் அடிச்சிருச்சு. அதனால் யார் கேட்டாலும் இதைச் செய்றதை ஸ்டாப் பண்ணிட்டேன். ஏன்னா,நான் ஒரு ஆர்டிஸ்ட். என்கிட்ட நடிப்பை எதிர்பார்த்தால் சரியாக இருக்கும் என்று நினைக்குறேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement