இந்தி படத்தை விட விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை.! இளம் நடிகை பேட்டி.!

0
1040
Vijay
- Advertisement -

ஒரு ஆதர் லவ் என்ற ஒரே ஒரு படத்தின் மூலம் உலகளவில் பிரபலமடைந்தவர் நடிகை ப்ரியா வாரீர். தற்போது ஸ்ரீதேவி பங்களா என்ற புதிய இந்தி படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

-விளம்பரம்-

ஸ்ரீதேவியின் வாழக்கை வரலாற்றில் நடிக்கும் பிரியா வாரீர் ட்ரைலரில் மது பிடித்தல், குறைவான அடையில் நடித்தல் போன்ற காட்சிகள் இடம்பெற்றது. மேலும், ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் இறந்த கிடப்பதுபோல காட்சிகளும் இடம் பெற்றது. ப்ரியா வாரீயர் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிப்பதை பலரும் எதிர்த்து வந்தனர்.

இதையும் படியுங்க : அக்கா நீ விஜய் கூட நடிச்சே ஆகா வேண்டும் ! அப்போதான் இது நடக்கும் ! அடம்பிடிக்கும் தம்பி 

- Advertisement -

மேலும், ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், இந்த படத்தின் தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த படத்தின் இயக்குனருக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பினார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரியா வாரியர் இனி பாலிவுட் படங்களில் நடிக்க நாட்டம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்ததாக இந்தி படத்தில் நடிப்பதை விட விஜய்யுடன் நடிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். பிரியா வாரியர் மட்டுமல்ல அவரது சகோதரர் கூட விஜய்யின் தீவிர ரசிகர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement