விருது விழாவிற்கு வித்தியாசமாகி வந்த ப்ரியாமணி .? ரசிகர்கள் கேள்வி.! புகைப்படம் உள்ளே!

0
1677
Priyamani actress

பெரும்பாலான நடிகைகள் சில படங்களை விட பொது நிகழ்ச்சிகளில் தான் வித்யாசமான தோற்றத்தில் வந்து அனைவரின் கவனத்தயும் ஈர்ப்பனர். பொது நிகழ்ச்சியில் வித்யாசமாக வருவது பெஷன் ஆகிவிட்டது. இந்நிலையில் சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை ப்ரியாமணியை பார்த்த அனைவருக்கு கொஞ்சம் ஆச்சர்யம் தான் ஏற்பட்டது.

actress priyamani

நடிகை பிரியமைனியை நாம் அனைவரும் எளிதில் மறக்க வாய்பில்லை. தமிழில் 2007 ஆம் ஆண்டு இயக்குனர் அமீரின் இயக்கத்தில் வெளியான ‘பருத்தி வீரன்’ படத்தில் நடித்த முத்தழகு கதாபாத்திரத்தையும் நாம் யாராலும் மறக்க முடியாது. அந்த கதாபாத்திரத்தில் நடித்ததர்காக அவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது.

2004 ஆம் ஆண்டு தமிழ்ல் வெளியான ‘கண்களால் கைது செய்’ என்ற படத்தில் நடித்தார். பின்னர் பிரபல இயக்குனர் பாலு மஹிந்திரா இவரைக் கண்டு 2005 அவர் இயக்கிய ‘அது ஒரு கனா காலம்’ என்ற படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர் மனதில் பதிந்தார்.

priya mani

படங்களில் வாய்ப்பு குறையவே தற்போது பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார். சமீபத்தில் நடிகை ப்ரியாமணி பிலிம் ஃபேர் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அப்போது அவரின் தலைமுடியை கண்ட அனைவரும் கொஞ்சம் ஆச்சர்யப்பட்டனர். ஏனெனில் நீளமாக இருந்த தனது தலைமுடியை முற்றிலும் குறைத்து ஒரு வித்யாசமான ஹேர் ஸ்டைலில் வந்திருந்தார் நடிகை ப்ரியாமணி.