தன்னுடைய தந்தை இழந்த சோகத்தை சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் விஜே பிரியங்கா கூறியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள். அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் மக்களின் ஃபேவரட் தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா. இவருடைய பேச்சும், சுட்டி தனமும் ரசிகர்களை சீக்கிரமாகவே கவர்ந்தது.
அதிலும் இவரின் பிரபலமே சிரிப்பு தான். இதனாலேயே குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரியங்கா பிரபலமானார். இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதிலும் விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல வருடங்களாக பிரியங்கா தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். பின் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியையும் பிரியங்கா தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா:
மேலும், பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ள ப்ரியங்காவிற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா மிகத் திறமையாக விளையாடி இருந்தார். பின் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரியங்கா டைட்டில் வின்னர் ஆகவில்லை என்றாலும் நிகழ்ச்சியில் ரன்னர் அதாவது இரண்டாம் இடத்தை பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரியங்கா வழக்கம் போல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 நிகழ்ச்சி:
தற்போது இவர் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி பல வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. சொல்லப் போனால் வெள்ளித்திரைக்கு பாடகர்களை உருவாக்கி தரும் பாலமாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பல பாடகர்கள் வெள்ளித் துறையில் பிரபலமாக இருக்கிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சி ஜூனியர் சீனியர் என்ற இருப்பிரிவுகளில் நடைபெற்று வருகிறது.
சனு மித்ரா தந்தை:
அந்த வகையில் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 நிகழ்ச்சி தான் நடந்து வருகிறது. இந்த நிலையில் சனு மித்ரா என்ற போட்டியாளர் தன்னுடைய தந்தை விபத்தில் இறந்த கதையை கூறியிருக்கிறார். இதைக் கேட்டு மொத்த அரங்கமே சோகத்தில் ஆழ்த்தி இருந்தது. மேலும், இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்று தன்னுடைய தந்தையின் கனவை நினைவாக்க வேண்டும் என்று தன்னுடைய தாயின் துணையோடு சனு மித்ரா போராடுகிறேன் என்று கூறியிருந்தார்.
தந்தை குறித்து பிரியங்கா சொன்னது:
இந்த நிலையில் இதை கேட்டு அழுத பிரியங்கா, என்னுடைய 11 வயதில் என்னுடைய தந்தை ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார். என்னுடைய அம்மா தான் தந்தை போல என்னையும் என் தம்பியையும் பார்த்துக் கொண்டார். என்னுடைய அப்பா எங்களோடு இருந்து எப்போதும் ஆசீர்வதிப்பார் என்று எங்களுக்கு ஆறுதல் என்று கூறினார். இவரை அடுத்து இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் இசையமைப்பாளர் தமனும் தன்னுடைய தந்தை கூறியிருந்தார். பின் உன்னுடன் நாங்கள் அனைவரும் இருப்போம். எதற்கும் கவலைப்பட கூடாது என்று பலரும் சனு மித்ராவுக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்கள்.