பொதுவாகவே பிரபலங்கள் சினிமாவை தாண்டி விளம்பரம், கடை திறப்பு விழா, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வழக்கம். இதனாலே பிரபங்களை காண ரசிகர்களின் கூட்டம் கடல் அலை போல கூடும். அந்த வகையில் ஐதராபாத்தில் ஒரு துணி கடை திறப்பு விழாவிற்கு நடிகை பிரியங்கா மோகன் இன்று சென்றிருக்கிறார். அப்போது கடைக்குள் பிரியங்கா செல்லும் போது அவரை சுற்றி பெரிய அளவில் கூட்டம் கூடி கடும் நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.

இதனால் அவர் ரொம்பவே சிக்கித் தவித்து இருக்கிறார். அதற்கு பின் எப்படியோ அங்கிருந்து பிரியங்கா மோகன் வெளியே வந்திருக்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு ஏற்கனவே ஒரு கடை திறப்பு விழாவின்போது அமைக்கப்பட்ட மேடையில் பிரியங்கா மோகன் இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த மேடை கீழே சரிந்து விழுந்து இருக்கிறது. ஆனால், பிரியங்காவிற்கு பெரிதாக எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை.
பிரியங்கா வீடியோ:
தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் பிரியங்கா மோகன். இவர் கன்னட திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து இருந்தார். அதன் பின் இவர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
View this post on Instagram
பிரியங்கா திரைப்பயணம்:
அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் தெலுங்கில் நானி நடிப்பில் வெளிவந்த சரிபோதா சனிவாரம் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. பின் இவர் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த பிரதர் என்ற படத்தில் நடித்து இருந்தார். தற்போது பிரியங்கா மோகன் அவர்கள் தெலுங்கில் நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் வெளிவந்த ஓஜி என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

பிரியங்கா படங்கள்:
இந்த படத்தில் பாலிவுட் நடிகர் இம்ரான், பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி, அர்ஜுன் தாஸ், ஷாம் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு தமன் இசை அமைத்திருக்கிறார். இந்த படம் கடந்த மாதம் தான் வெளியாகியிருந்தது. இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இதை எடுத்து பிரியங்கா மோகன் இன்னும் சில படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.






