நிகழ்ச்சியை பார்க்க வந்தவரிடம் முத்தம் கேட்ட பிரியங்கா – வீடியோவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.

0
1996
Priyanka
- Advertisement -

நிகழ்ச்சியில் முதியவர் ஒருவர் பிரியங்காவிற்கு முத்தம் கொடுப்பது இருப்பதை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வரும் பதிவு சோசியல் மீடியாவில் ட்ரென்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள். அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் மக்களின் ஃபேவரட் தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா. இவருடைய பேச்சும், சுட்டி தனமும் ரசிகர்களை சீக்கிரமாகவே கவர்ந்தது.

-விளம்பரம்-

அதிலும் இவரின் பிரபலமே சிரிப்பு தான். இதனாலேயே குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரியங்கா பிரபலமானார். இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதிலும் விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல வருடங்களாக பிரியங்கா தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். பின் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியையும் பிரியங்கா தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

- Advertisement -

தொகுப்பாளர் பிரியங்கா:

இதனிடையே பிரியங்கா கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரவீன் குமாரும் விஜய் டிவியின் தயாரிப்பு குழுவில் பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரியங்கா திருமணத்திற்க்கு பிறகும் தனது தொகுப்பாளர் பணியை தொடர்ந்து செய்து வருகிறார். மேலும், கடந்த ஆண்டு முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ள ப்ரியங்காவிற்கு வாய்ப்பு கிடைத்தது. அதோடு இந்த நிகழ்ச்சியில் முகம் தெரிந்த நபர் என்றால் சிலர் தான். அதில் தொகுப்பாளினி பிரியங்காவும் ஒருவர்.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரியங்கா:

இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா மிகத் திறமையாக விளையாடி வந்தார். பல பிரச்சனைகளில் பிரியங்கா சிக்கி இருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார். அதுமட்டும் இல்லாமல் பல முறை எவிக்சனில் பிரியங்கா வந்து இருந்தாலும் மக்கள் அவரை காப்பாற்றினார்கள். பின் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரியங்கா டைட்டில் வின்னர் ஆகவில்லை என்றாலும் நிகழ்ச்சியில் ரன்னர் அதாவது இரண்டாம் இடத்தை பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரியங்கா வழக்கம் போல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

-விளம்பரம்-

நிகழ்ச்சியில் கலக்கும் பிரியங்கா:

தற்போது விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் சீனியர் 9 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. அதேபோல் தற்போது ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சி 3 சீசன்களை கடந்து நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் விஜய் டிவியில் உள்ள பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு கலகலப்பாக சென்று கொண்டு இருக்கின்றது. அது மட்டும் இல்லாமல் நடிகர்களும் இந்த நிகழ்ச்சியில் சுவாரசியமாக விளையாடி பணத்தை வென்று செல்கின்றனர். அதிலும் இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் மற்றும் பிரியங்கா செய்யும் லூட்டிகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்படுகின்றன

கலாய்க்கும் நெட்டிசன்கள்:

இந்த நிலையில் இந்த வார நிகழ்ச்சிக்கான ப்ரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக முதியவர் ஒருவர் தன்னுடைய குடும்பத்துடன் வந்திருக்கிறார். அப்போது அவருடைய அருகில் சென்று பிரியங்கா ஸ்டார் மியூசிக் என்று சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறார். ஆனால், அவர் தனக்கு சொல்ல வராது என்று வெட்கப்பட்டு இருந்தார். பிரியங்கா மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்க அந்த நபர் மறுத்து விட கடைசியில் அப்போ எனக்கு ஒரு பிளைன் கிஸ் கொடுங்க என்று கூறியிருக்கிறார். அதற்கு அந்த நபரும் பிளைன் கிஸ் கொடுத்து இருக்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோ தான் வெளியாகியிருக்கிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் நிகழ்ச்சிக்காக இப்படியெல்லாம் செய்வீங்களா? என்று பங்கமாக கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement