என்னது, ஆஸ்கர் வென்ற RRR தெலுகு படம் இல்லையா ? ஹாலிவுட் பேட்டியில் பிரியங்கா சொன்ன கருத்தால் கடுப்பான தெலுங்கு ரசிகர்கள்.

0
367
RRR
- Advertisement -

ஆஸ்கர் விருது பெற்ற ராஜமவுலியின் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தை தமிழ் படம் என்று பிரபல நடிகை அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய சினிமா உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் ராஜமௌலி. இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் ராஜமௌலி இயக்கிய படங்களில் ஒன்று பாகுபலி. பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பின் இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான படம் RRR.

-விளம்பரம்-

இந்த படம் ஐந்து ஆண்டுகள் கழித்து திரைக்கு வெளியாகி இருக்கிறது. RRR என்பது இரத்தம் ரணம் ரெளத்திரம் என்று பொருள். மேலும், இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள். இவர்களுடன் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ராகுல் பட், அலிசான் டூடி போன்ற பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தை டிவிவி நிறுவனம் தயாரித்து இருந்தது.

- Advertisement -

RRR படம்:

மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது. இந்த படம் வெளியாகி இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. வசூலிலும் இந்த படம் கோடிக்கணக்கில் குவித்து இருந்தது. இந்த படத்தில் VFX காட்சிகள் அற்புதமாக இருந்தது. அதோடு ஆக்ஷன் காட்சிகளும் மெய் சிலிர்க்க வைத்தது. குறிப்பாக, ‘நாட்டு நாட்டு’ என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.

படம் குறித்த தகவல்:

இந்த படம் குறித்து பலமொழி பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்த படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு மேல் அதிகமாக வசூல் செய்து இருந்தது. சமீபத்தில் நடந்த 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் RRR படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு என்ற பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருந்தது. இதற்காக திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே ஆர் ஆர் ஆர் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

RRR படம் குறித்த கேள்வி:

இந்த நிலையில் ஆர் ஆர் ஆர் படம் குறித்து பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா அளித்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, பாலிவுட்டில் பிரபல நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்க டிவி ஒன்றுக்கு பேட்டி ஒன்று அளித்திருந்தார்.

நடிகை பிரியங்கா சோப்ராவை விமர்சிக்கும் நெட்டிசன்கள்:

அப்போது அவரிடம் ஆர் ஆர் ஆர் என்ற பாலிவுட் திரைப்படம் என்று கூறும் போது உடனே அவர், இல்லை அது ஒரு தமிழ் திரைப்படம் என்று கூறியிருந்தார். இப்படி இவர் பேசியிருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி இருக்கிறது. இதை பார்த்த நெட்டிசன்கள்பலரும், ஆர் ஆர் ஆர் ஒரு தெலுங்கு படம் என்று கூட தெரியாமல் பிரியங்கா சோப்ரா இருக்கிறாரா? என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.

Advertisement