அவர பாத்து தான் நானும் அந்த விஷயத்த இப்போ வர கடைப்பிச்சிட்டு வரேன் – பிரியங்கா சோப்ரா பளீச்.

0
172
priyanka
- Advertisement -

இந்திய திரை உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் இந்திய நடிகை மட்டுமில்லாமல் முன்னாள் உலக அழகியும் ஆவார். இவர் மாடலாக தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார். பின் பல விளம்பரங்களில் நடித்து வந்தார். பிறகு 2000 ஆண்டில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் பங்குபெற்று வெற்றியும் பெற்று மிகப்பிரபலமானார் பிரியங்கா சோப்ரா. அதனை தொடர்ந்து இவர் 2002 ஆண்டு மஜீத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் என்ற படத்தில் நடிகையாக பிரியங்கா சோப்ரா அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் ஹிந்தியில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-
Mattu Mattu Nee HD Video Songs # Tamil Songs # Vijay, Priyanka Chopra -  YouTube

இவர் நடித்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தமிழன் படத்திற்கு பிறகு பிரியங்கா சோப்ரா பாலிவுட்டிலேயே தங்கிவிட்டார். அதன் பிறகு தமிழ் சினிமா பக்கமே அவர் எட்டிப் பார்க்கவே இல்லை. இவர் அதிகம் இந்தி மொழியில் தான் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிரியங்கா சோப்ரா அவர்கள் ஹாலிவுட், பாலிவுட், வெப் சீரிஸ் என பிஸியாக நடித்து உலக அளவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.

- Advertisement -

பிரியங்கா சோப்ரா அளித்த பேட்டி:

இந்நிலையில் பிரியங்கா சோப்ரா சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் தன் வாழ்க்கை குறித்தும், விஜய் குறித்தும் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, முதன் முதலில் நான் தமிழன் என்ற படத்தில் நடித்து இருந்தேன். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அதோடு அன்றைய காலகட்டத்தில் அது மிகப்பெரிய படம். மேலும், நடிப்பு என்றால் நாம் அணியும் ஆடை, மேக்கப் மட்டுமே என்ற எண்ணத்தோடு தான் நான் படப்பிடிப்பு தளத்துக்குள் சென்றேன்.

Priyanka Chopra heaps praise on Vijay in her book 'Unfinished'!

விஜய் பற்றி பிரியங்கா சோப்ரா கூறியது:

அதற்கு பிறகு தான் எனக்கு சினிமா, நடிப்பு என்ன என்று தெரிந்தது. நான் தமிழன் படத்தில் நடிக்கும் போது சுத்தமாகவே எனக்கு தமிழ் மொழி தெரியாது. அதனால் தமிழன் திரைப்படத்தில் நடித்தது எனக்கு மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. அப்போது நான் வசனங்களை கேட்டு, அவற்றை மனப்பாடம் செய்து, அதன் அர்த்தத்தை புரிந்து கொண்டு அதற்கு பிறகு தான் என்னுடைய வரிகளை பேசுவேன். மேலும், என்னுடைய சக நடிகர் விஜய் நடிப்பதை பார்த்துக் கொண்டு இருப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னுடைய திரைவாழ்க்கையில் ஆரம்பத்தை தாக்கத்தை ஏற்படுத்திய சிலரில் அவரும் ஒருவர். விஜய் எப்போதும் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் பணிவுடன் இருப்பார்.

-விளம்பரம்-

விஜய்யிடம் கற்று கொண்டது:

தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களுக்கும் மரியாதை கொடுப்பார். அதோடு ஒருமுறை படப்பிடிப்பு தளத்துக்கு வந்து விட்டால் அதன் பிறகு அவர் வெளியே செல்லவே மாட்டார். அதை பார்த்து தான் நானும் கடைப்பிடிக்க தொடங்கினேன். அவரிடம் நான் இதை கற்று கொண்டேன். அதை நான் இன்றும் கடைபிடித்து வருகிறேன். நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் என்றால் மட்டுமே தவிர நான் என்னுடைய கேரவனுக்கு திரும்பி செல்வேன். இல்லை என்றால் நான் படப்பிடிப்பு தளத்திலேயே சுற்றி கொண்டு இருப்பேன். இதுபோல பல விஷயங்களை நான் விஜய்யிடம் இருந்து கற்றுக் கொண்டேன் என்று கூறி இருக்கிறார். மேலும், இவர் ஏற்கனவே அண்ட் பினிஷ்ட்டு என்று ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார்.

See what Priyanka Chopra said after being called a 'hypocrite' - CNN Video

விஜய்யின் திரை பயணம்:

அதில் நடிகர் விஜய் குறித்தும், விஜய் தன் ரசிகர்களிடம் நடந்து கொள்ளும் விதத்தை குறித்தும் குறிப்பிட்டிருந்தார். இப்படி இவர் கூறிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா உலகில் என்றென்றும் முடிசூடா மன்னனாகவும், மக்களின் தளபதியாகவும் திகழ்பவர் விஜய். இவருக்கு மக்கள் மட்டுமில்லாமல் பல பிரபலங்கள் இவருடைய ரசிகர்களாக இருக்கிறார்கள். இவருடைய படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். அதுமட்டுமில்லாமல் இவருடைய படம் வந்தாலே போதும் கோடிக்கணக்கில் வசூலில் வாரி குவித்து விடும்.

Advertisement