அமெரிக்காவில் கருப்பினத்தவர் இறந்தது குறித்து கவலைப்படும் நீங்கள் தானே இந்த விளம்பரத்தில் நடிச்சீங்க- பிரியங்காவை வருந்தெடுத்த நெட்டிசன்கள்.

0
2901
Priyanka
- Advertisement -

பல்வேறு நாட்டை உலுக்கி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் அமெரிக்காவில் தான் அதிகம் இருந்து வந்த நிலையில் தற்போது அங்கே கருப்பின மக்களுக்கு ஆதரவாக ஒரு பெரிய போராட்டம் வெடித்து உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. அமெரிக்காவில் கறுப்பின குடிமகன் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்ட போது உயிரிழந்த சம்பவம் தான் இந்த போராட்டத்திற்கு மைய புள்ளியாக இருந்து உள்ளது.

-விளம்பரம்-

அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிலாய்ட் என்ற கறுப்பின மனிதர் கடந்த மே 25 ஆம் தேதி நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைவிலங்கு செய்த போது அவரது முழங்கால்களால் தரையில் அமர்த்தி அவரது கழுத்தில் கால் வைத்து அழுத்தியதால்இறந்தார். ஜார்ஜ் ஃபிலாய்ட் கைது செய்யப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வெளிவந்தது,அதில் அவர் சுவாசிக்க அனுமதிக்குமாறு அதிகாரிகளிடம் மன்றாடுவதைக் காணலாம்.

- Advertisement -

அவரது குமுறலை கண்டு கொள்ளாமல் போலீஸ் அதிகாரி அவரது கழுத்தில் கால் வைத்து தொடர்ந்து அழுத்தியதால் அவர் மூச்சி திணறி இறந்தார். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த தற்போது கறுப்பின மக்களுக்கு ஆதரவாக ஒட்டு மொத்த அமெரிக்க மக்களும் போராட்டத்தை துவங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த போராட்டதிற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பிரியங்கா சோப்ரா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார்.

அதில், இந்த வெறுப்புணர்வை வெறுக்க வேண்டும் என்று அனைவரிடமும் கற்றுக்கொடுக்க வேண்டும், அமெரிக்கா மற்றும் இந்த உலகத்தில் மற்ற இடங்களில் இருக்கும் இன வெறிக்கு எதிராக போராட வேண்டும், வெறும் தோலின் நிறம் காரணமாக ஒருவர் கையால் மற்றொருவர் இறப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பதிவிட்டிருந்தார்.

-விளம்பரம்-

பிரியங்கா சோப்ராவின் இந்த பதிவை கண்ட சிலர், அமெரிக்காவில் கருப்பின இனத்தவர் இறந்தது குறித்து பேசும் பிரியங்கா தான் கார்னியர் அழகு சாதன விளம்பரத்தில் வெள்ளையாக இருப்பது குறித்து விளம்பரம் செய்தார் என்றும் விமர்சித்து வருகின்றனர். மேலும், இந்தியாவில் ஜாதி சண்டையால் உயிரிந்தோர் குறித்து இதுவரை எந்த பதிவையாவது போட்டுள்ளாரா என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்

Advertisement