ஒருத்தருக்கு இரங்கல் தெரிவிக்கும் போது கூட நீங்க அறிவாளின்னு காமிச்சிக்கணுமா . சுஷாந்த்திற்கு இரங்கல் தெரிவித்த பிரியங்கா சோப்ராவை கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

0
22688
- Advertisement -

ரீல் எம்.எஸ் தோனியாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் சில தினங்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. ஆரம்பத்தில் இவர் நடன கலைஞராகவும், சிறு சிறு கதாபாத்திரங்களில் தான் படங்களில் நடித்து வந்தார். அதற்கு பிறகு இவர் பல படங்களில் நடித்து உள்ளார்.

இந்த நிலையில் இவருடைய மரண செய்தியை அறிந்து ரசிகர்களும், பிரபலங்களும் கவலையில் உள்ளார்கள். இவருக்கு பாலிவுட்டில் மட்டுமல்லாமல் பல்வேறு மொழியிலும் ரசிகர்கள் உள்ளார்கள். தற்போது இவருக்கு 34 வயது தான் ஆகிறது.மேலும், நடிகர் சுஷாந்த் இறந்ததற்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. நடிகர் சுஷாந்த் சிங் கடந்த இரண்டு மாதங்களாகவே கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது

- Advertisement -

மேலும், பிரேத பரிசோதனையின் போதும் இதே காரணம் தான் கூறப்பட்டது. இந்த நிலையில் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா, சுஷாந்த்தின் தெரிவிக்கும் விதமாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதில், நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன், நீ கண்டிப்பாக நிறைய வலிகளுடன் இருந்திருப்பாய். நீ எங்கு இருந்தாலும் நீ நிம்மதியாக இருப்பாய். இவ்வளவு விரைவில் சென்று விட்டாயே.

சூரிய உதயத்தின் போது வானியற்பியல் குறித்து நாம் பேசியதை நான் கண்டிப்பாக மறக்க மாட்டேன். எனக்கு வார்த்தைகள் வரவில்லை. இந்த பெரிய இழப்பை சந்தித்துள்ள அவரது குடம்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் என்று தெரிவித்திருந்தார். பிரியங்காசோப்ராவின் இந்த பதிவை கண்டு பலரும் கழுவி ஊற்றி வருகின்றனர்.

-விளம்பரம்-

அதற்கு முக்கிய காரணமே பிரியங்கா சோப்ராவின் பதிவில் ‘வானியற்பியல்’ என்று குறிப்பிட்ட அந்த சொல் தான். அதனை கண்ட ரசிகர்கள் ஒருவரின் இறப்பிற்கு இரங்கல் தெரிவிக்கும் போது கூட உங்களின் அறிவு பெருமையை குறித்து பேசுவார்களா ‘ என்று பிரியங்கா சோப்ராவை வறுத்தெடுத்து வருகின்றார்கள்.

Advertisement