எந்த பள்ளியில் பிகினி அணிந்து செல்ல முடியும் ? பிரியங்கா காந்தி கருத்தை கேலி செய்யும் நெட்டிசன்கள்.

0
516
- Advertisement -

பெண்கள் துன்புறுத்துவதை நிறுத்துங்கள் என்று கர்நாடகா ஹிஜாப் விவகாரம் குறித்து பிரியங்கா காந்தி தெரிவித்து இருக்கும் கருத்து தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கர்நாடகாவில் பெரும்பாலான கல்லூரிகளில் இஸ்லாம் மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து சில இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தினர். இதனால் இஸ்லாமிய மாணவ, மாணவிகள் குல்லா, ஹிஜாப், பருதா, புர்கா அணிந்து கல்லூரிக்கு வர கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது. இருந்தும் இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்திருக்கிறார்கள். இதனை அடுத்து வகுப்பறைக்கு செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்து மாணவிகள் பல நாட்கள் போராட்டம் நடத்தினார்கள். ஆடை அணிவது என்பது எங்கள் உரிமை.

-விளம்பரம்-

அதை யாரும் தடுக்க முடியாது என்று உயர் நீதி மன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தால் நாங்கள் காவி துண்டு அணிந்து வருவோம் என்று என்று கூறி மாணவர்கள் காவி துண்டு அணிந்து வந்தனர். சில மாணவிகள் காவி துப்பட்டா அணிந்து வந்தனர். இதனால் கர்நாடக மாநிலம் முழுவதும் மத ரீதியாக பிரச்சனை நிலவியது. பின் மாணவ, மாணவிகள் பொதுவான சீருடையை அணிந்து வர வேண்டும் என்று மாநில அரசு அதிரடி உத்தரவிட்டது. இப்படி இருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு இஸ்லாம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்த நிலையில் இதற்கு பதில் காவி அணிந்து வந்த மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

- Advertisement -

கர்நாடகாவில் பியு கல்லூரிகளில் நடக்கும் மோதல்:

இதனால் கர்நாடகாவில் இருக்கும் சிவமொக்கா, உடுப்பி, மங்களூர், சிக் மங்களூர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள பியு கல்லூரிகளில் இந்த மோதல் ஆர்ப்பாட்டமாக நிலவியிருக்கிறது. மேலும், இந்த விவகாரத்தை கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது. அதில் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி கேட்டு தொடுத்த மனு மற்றும் அதற்கு எதிராக தொடுக்கப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடந்து வருகிறது. அதற்கு உயர்நீதிமன்ற நீதிபதி கூறியது, இந்த வழக்கை சட்டப்படி விசாரிப்போம். இதில் உணர்வுகளை பற்றி யோசிக்கக் கூடாது. நமது அரசியலமைப்பு சட்டம் என்ன சொல்லி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். மேலும், நமது அரசியலமைப்பு சட்டத்தின் படி தான் நாங்கள் வழக்கு விசாரணை நடத்துவோம்.

இந்து-முஸ்லீம் மாணவர்கள் இடையே கலவரம்:

ஆனால், இதனால் தினமும் நாட்டில் நடக்கும் மாணவர்களுக்குள் நடக்கும் பிரச்சனையை பார்க்கும்போது அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் இருக்கிறது என்று கூறி தான் இருந்தார். இந்த நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாப் புராவில் ஒரு கல்லூரியில் மாணவிகள் பர்தா அணிந்து வர தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்து இருக்கிறார்கள். இதனால் இந்துத்துவா மாணவர்களுக்கும், இஸ்லாமிய மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்துத்துவா மாணவர்கள் முழுவதும் கரகோஷம் செய்து போராட்டம் நடத்தி வந்தார்கள். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் இஸ்லாமிய மாணவிகள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

-விளம்பரம்-

கலவரத்தால் ஏற்பட்ட விபரீதம்:

இதில் மாணவிகள் காயம் அடைந்த நிலையில் இந்துத்துவா 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். பின் உடனடியாக போலீஸ் வந்து லத்தி சார்ஜ் நடத்தி மாணவ, மாணவியரை அப்புறப்படுத்தினர். இருந்தும் இஸ்லாமிய மாணவி ஒருவரை இந்துத்துவா மாணவர்கள் சுற்றி வளைத்து ஜெய்ஸ்ரீராம் என்று கரகோஷம் செய்து இருக்கிறார்கள். ஆனால், அந்த பெண் யாரையும் பார்த்து பயப்படாமல் தனியாக நின்று கையை உயர்த்தி கோஷம் எழுப்பி எனக்கு பயம் இல்லை என்பதை சத்தமாகசொல்லி இருக்கிறார். தற்போது இந்தப் பிரச்சனை இந்தியா முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் மதரீதியாக கல்லூரி மாணவர்கள் இப்படி மோதிக்கொள்ளும் சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரியங்கா காந்தி ட்விட்டரில் கூறியது:

இதற்கு அரசாங்கம் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இது குறித்து பிரியங்கா காந்தி ட்விட்டரில் கருத்து ஒன்று தெரிவித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, பிகினி, கூங்காட், ஒரு ஜோடி ஜீன்ஸ் அல்லது ஹிஜாப் அல்லது எந்த ஆடையாக இருந்தாலும் தான் விரும்பும் உடைகளை அணிய பெண்களுக்கு உரிமை உள்ளது. இந்த உரிமை இந்திய அரசியலமைப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே பெண்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள் என்று குரு இருக்கிறார்.

கலாய்க்கும் நெட்டிசன்கள் :

அதுமட்டும் இல்லாமல் இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம் பி ராகுல் காந்தி ஏற்கனவே கருத்து தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் கருத்துக்கு சிலர் ஆதரவாகவும், சிலர் எதிர்ப்பு தெரிவத்தும் வருகின்றனர். மேலும், எந்த பள்ளியில் பிகினி அணிந்து மாணவர்கள் செல்கிறார்கள் என்று மீம்களை போட்டு பிரியங்காவின் கருத்தை கலாய்த்து வருகின்றனர்.

Advertisement