சின்னத்திரை சீரியலில் நடிப்பது குறித்து காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியின் காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தவர் வெண்ணிலா. இவரது நிஜப் பெயர் பிரியங்கா குமார். இவர் கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தார். இவருக்கு நடிப்பின் மீது அதிக ஆர்வம் இருந்ததால் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதே தனது 15 வயதில் மாடலிங் செய்ய ஆரம்பித்தார்.
பின் இவர் பல விளம்பரங்களில் நடித்து இருந்தார். அதன் பிறகு மைசூரில் உள்ள வித்யாஷ்ரம் கல்லூரியில் பிபிஏ படித்தார். அதன் பின் ப்ரியங்கா 2016-ல் நடந்த ‘மேக்ஸ் எலைட் மாடல் லுக் இந்தியா’ போட்டியில் பங்கு பெற்று வெற்றியும் பெற்றார். இந்த பிரபலத்தினால் தான் ப்ரியங்காவிற்கு கன்னட சின்னத்திரையில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த ‘காற்றுக்கென்ன வேலி’ என்ற சீரியலில் நடித்து இருந்தார்.
காற்றுக்கென்ன வேலி சீரியல்:
இந்த தொடரில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் பிரியங்கா நடித்து இருந்தார். ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்ற கனவோடு இருக்கும் வெண்ணிலாவுக்கு அவருடைய அப்பா கல்யாண ஏற்பாடு செய்தார். ஆனால், வெண்ணிலா கல்யாண நாளன்று வீட்டை விட்டு வெளியேறி தன் கனவை நனவாக்க போராடி இருந்தார். பின் வெண்ணிலாவுக்கு பல்வேறு வகையில் பிரச்சனைகள் வந்தது. இருந்தும் ஹீரோ சூர்யா தான் வெண்ணிலாவுக்கு உறு துணையாக நிற்கிறார்.
பிரியங்கா குறித்த தகவல்:
அதற்கு பின் என்ன நடந்தது என்பது தான் சீரியல் கதை. இந்த சீரியல் கடந்த ஆண்டு தான் முடிவடைந்தது. மேலும், இந்தத் தொடரின் மூலம் பிரியங்கா தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இதற்குப் பின் இவர் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. மேலும், இவர் நிறைய போட்டோ ஷூட் தான் நடத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கூட இவருடைய கிளாமரான புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் பயங்கர ட்ரெண்டிங் ஆகியிருந்தது.
பிரியங்கா நடிக்கும் புது படம்:
தற்போது இவர் தெலுங்கில் அதுரி லவ்வர் மற்றும் ருத்ர கருட புராணம் போன்ற படங்களில் ஹீரோயினியாக நடித்து முடித்திருக்கிறார். இந்த படங்கள் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. இதை தொடர்ந்து இவர் கன்னடத்திலும் ஒரு படத்தில் ஹீரோயினியாக நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். அந்த படத்தை மன்சோரே என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் ப்ரியங்காவுக்கு ஜோடியாக விஜய் கிருஷ்ணா நடிக்க இருக்கிறார். மேலும், இந்த படத்தில் புல்லாங்குழல் கலைஞராக பிரியங்கா நடித்திருக்கிறார்
ப்ரியங்கா பேட்டி:
இந்த படத்திற்கு தூர தீர யான என்று பெயர் இடப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை பிரியங்கா, மீண்டும் சீரியலில் நடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் சீரியலில் நடித்தேன். இப்போது நான் படங்களில் கமிட்டாகி இருக்கிறேன். இப்போது ஒரு படத்தில் நான் புல்லாங்குழல் வாசிக்க பயிற்சி எடுத்துக் கொண்டு வருகிறேன். இந்த படத்தில் தான் என்னுடைய முழு உழைப்பையும், கவனத்தையும் கொடுக்க இருக்கிறேன். இப்போதைக்கு சீரியலில் நடிப்பதைப் பற்றி நான் யோசிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.