கடை திறப்பு விழாவில் மேடை சரிந்து நடிகை பிரியங்கா மோகன் கீழே விழுந்திருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாகவே பிரபலங்கள் சினிமாவை தாண்டி விளம்பரம், கடை திறப்பு விழா, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வழக்கம். இதனாலே பிரபங்களை காண ரசிகர்களின் கூட்டம் கடல் அலை போல கூடும். அந்த வகையில் தெலுங்கானா கடை திறப்பு விழாவில் நடந்த சம்பவம் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நல்வாய்ப்பாக உயிர் தப்பினேன் என்று பிரியங்கா ட்வீட்..#PriyankaMohan
— Stand With Savukku (@Karthickrames1) October 3, 2024
pic.twitter.com/OmMDC1UzPt
தெலுங்கானாவில் Torrurல் ஒரு கடை திறப்பு விழாவிற்கு நடிகை பிரியங்கா மோகன் சென்று இருந்தார். அப்போது கடைக்கு முன்பு மேடை அமைக்கப்பட்டு அதில் கடையின் உரிமையாளர், பிரியங்கா மோகன் உட்பட பலர் இருந்தார்கள். பிரியங்கா மோகனை சந்திக்க ரசிகர்கள் கூட்டமும் சூழ்ந்து இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பிரியங்கா மோகன் இருந்த மேடை சரிந்து கீழே விழுந்து இருக்கிறது. இதனாலே அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
பிரியங்கா மோகனுக்கு ஏற்பட்ட விபத்து:
அதற்குப்பின் அங்கிருந்த பாதுகாவலர்கள் பாதுகாப்பாக பிரியங்கா மோகனை அழைத்துச் சென்றார்கள். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பலரும் என்னாச்சு? பிரியங்கா மோகனுக்கு என்ன ஆனது? என்று கேள்வி கேட்டிருந்தார்கள். இதனை அடுத்து பிரியங்கா மோகன் பதிவு ஒன்று போட்டிருந்தார். அதில் அவர், நான் தோரூரில் நடந்த கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டிருந்தேன்.
In light of the accident that occurred at an event I had attended in Torrur today, I wanted to let my well wishers know that I'm okay and was lucky to escape with minor injuries.
— Priyanka Mohan (@priyankaamohan) October 3, 2024
My prayers and wishes for a speedy recovery to those who may have suffered any injuries in the…
பிரியங்கா மோகன் பதிவு:
அப்போது விழாவில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. தற்போது நான் நலமாக இருக்கிறேன். சின்ன காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன். என்னுடைய நலம் விரும்புகளுக்கு இதை தெரிவிக்க விரும்புகிறேன். சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவிலயே குணமடைய என்னுடைய பிரார்த்தனைகளும், வாழ்த்துக்களும். அவர்கள் எனக்கு அனுப்பிய அன்பு மற்றும் அக்கறையின் செய்திகளுக்கு அனைவருக்குமே நன்றி சொல்ல விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.
https://www.youtube.com/shorts/Bay7ZjtaGq4
பிரியங்கா மோகன் திரைப்பயணம்:
தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் பிரியங்கா மோகன். இவர் கன்னட திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதை பின் இவர் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து இருந்தார். அதன் பின் இவர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

பிரியங்கா மோகன் நடிக்கும் படம்:
அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் தெலுங்கில் நானி நடிப்பில் வெளிவந்த சரிபோதா சனிவாரம் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது இவர் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் பிரதர் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அதை அடுத்து இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.






