செல்பி கேட்ட ரசிகரிடம் நடிகை பிரியங்கா மோகன் சொன்ன வார்த்தை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் பிரியங்கா மோகன். இவர் கன்னட திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து இருந்தார்.
அதன் பின் இவர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த டாக்டர் படத்தின் மூலம் நடித்து தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே இவர் தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்து விட்டார் என்று சொல்லலாம். அதன் பின் இவர் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தில் நடித்து இருந்தார்.
பிரியங்கா மோகன் திரைப்பயணம்:
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது தென்னிந்திய ரசிகர்களின் கனவுக் கன்னியாகவே பிரியங்கா மோகன் திகழ்ந்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் இயக்குனர் மாதேஸ்வரன்-தனுஷ் கூட்டணியில் வெளிவந்த கேப்டன் மில்லர் படத்தில் நடித்து இருந்தார். இதை எடுத்து சமீபத்தில் நானி, எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியாகியிருந்த சரிபோதா சனி வாரம் என்ற தெலுங்கு படத்தில் பிரியங்கா மோகன் நடித்திருந்தார்.
பிரதர் படம்:
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது. இதை தொடர்ந்து இவர் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் பிரதர் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார்.
ரசிகர்கள் செய்தது:
இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணன், நட்டி நடராஜ், பூமிகா, வி டிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றிருந்தது. இந்த படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவிற்கு
பிரியங்கா மோகன் வந்திருந்தார். அப்போது அவரிடம் புகைப்படம் எடுத்துக் கொள்ள அவரின் காரை ரசிகர்கள் சுற்றி இருந்தார்கள்.
கடுப்பில் பிரியங்கா செய்தது:
பிரியங்காவும் முகம் சலிக்காமல் ஒவ்வொருவரின் மொபைலை வாங்கி செல்ஃபி எடுத்திருந்தார் பிரியங்கா. அப்போது ]சில ரசிகர்கள் அவரின் காருக்குள்ளே கையை நீட்டி புகைப்படம் எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். இதனால் கோபம் வந்த பிரியங்கா, காருக்குள்ளே வந்து விடுங்கள் என்று கோபமாக பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.