தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் பிரியங்கா மோகன். இவர் கன்னட திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து இருந்தார். அதன் பின் இவர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் தெலுங்கில் நானி நடிப்பில் வெளிவந்த சரிபோதா சனிவாரம் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. பின் இவர் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த பிரதர் என்ற படத்தில் நடித்து இருந்தார். தற்போது பிரியங்கா மோகன் அவர்கள் தெலுங்கில் நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் வெளிவந்த ஓஜி என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
பிரியங்கா மோகன் குறித்த தகவல்:
இந்த படத்தில் பாலிவுட் நடிகர் இம்ரான், பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி, அர்ஜுன் தாஸ், ஷாம் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு தமன் இசை அமைத்திருக்கிறார். இந்த படம் கடந்த மாதம் தான் வெளியாகியிருந்தது. இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இதை எடுத்து பிரியங்கா மோகன் இன்னும் சில படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்

பிரியங்கா மோகன் பதிவு:
இதை அடுத்து இன்னும் சில படங்களில் பிரியங்கா மோகன் கமிட் ஆகி நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் பிரியங்காவின் புகைப்படத்தை ஆபாசமாக சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே AI மூலம் பல நடிகைகளின் புகைப்படங்கள் தவறாக சித்தரிக்கப்பட்டு சோசியல் மீடியாவில் வருகிறது. இது தொடர்பாக பலருமே எதிர்ப்பு தெரிவித்தும், போலீசில் புகார் அளித்து வருகிறார்கள்.
View this post on Instagram
சர்ச்சைகளுக்கு பதிலடி:
அந்த வகையில் தற்போது பிரியங்கா மோகன் புகைப்படம் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு வைரலாகி வருகிறது. இந்நிலையில் இது குறித்து மறுப்பு தெரிவித்து பிரியங்கா மோகன் போட்ட பதிவில், என்னை ரொம்ப தவறாக சித்தரிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட படங்கள் வைரலாகி வருகிறது. தயவுசெய்து அந்த போலி புகைப்படங்களை ஷேர் செய்வதையும் பரப்புவதையும் நிறுத்துங்கள். AI படைப்பாற்றல் பயன்படுத்தப்பட வேண்டும், தவறான செயல்களுக்கு கிடையாது. நாம் என்ன உருவாக்குகிறோம்? என்ன ஷேர் செய்கிறோம்? என்பதில் கவனமாக இருப்போம் என்று கூறி இருக்கிறார்.






