என் மகளின் ஆத்மா. என்கௌண்டர் குறித்து பேசிய பிரியங்காவின் தந்தை.

0
4478
priyanka-reddy
- Advertisement -

நாட்டில் பெண்களுக்கு நாடக்கும் அநியாயங்கள், கற்பழித்து கொலை செய்யும் சம்பவங்கள் என அதிகரித்து கொண்டே உள்ளது. அது மட்டுமில்லாமல் இந்த கொடுமைகளை வழக்கமான ஒன்றாக மாற்றி விட்டார்கள் கேவலமான புத்தி உடைய மிருகங்கள். சில தினங்களுக்கு முன் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இளம் பெண் பிரியங்கா என்பவரை கொடூரமாக கற்பழித்து எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி வருகிறது. இந்த கோர சம்பவத்தை நடத்திய வழக்கில் லாரி ஓட்டுனர் மற்றும் கிளீனர் என நான்கு பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி உள்ளார்கள். இது குறித்து விசாரிக்கையில், பிரியங்கா தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். இவர் கொல்லப்பூரில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் வீட்டிற்கும், மருத்துவமனைக்கும் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் தான் செல்வார்.

-விளம்பரம்-

இந்நிலையில் பிரியங்கா வேலையை முடித்துவிட்டு தன் வண்டியில் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் போது சுங்கவாடி அருகே அவருடைய வாகனம் நின்றது. பின் அந்த கேவலமான எண்ணம் பிடித்தவர்கள் பிரியங்கா வண்டியை பஞ்சர் செய்து குளிர் பானத்தில் விஸ்கியை கலந்து பிரியங்காவை கட்டாயப்படுத்தி குளிர் பானத்தை குடிக்க வைத்தார்கள். பின் பிரியங்காவை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கடத்திச் சென்று அவளை வன்மையான முறையில் பாலியல் தொல்லைகளை செய்து கழுத்தை நெரித்து கொன்று விட்டார்கள் அந்த கேவலமான ஜென்மங்கள்.

இதையும் பாருங்க : பிரியங்கா வழக்கில் 4 பேரை என்கௌண்டர் செய்த இந்த சாஜ்னார் யார் தெரியுமா ? கேட்டா ஆடி போயிடுவீங்க.

- Advertisement -

அதுமட்டும் இல்லாமல் பிரியங்காவை ஒரு பாலத்திற்கு அடியில் போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்து உள்ளார்கள். பிரியங்காவின் சடலத்தை எரித்து விட்டுட்டு அந்த நால்வரும் தப்பிச் சென்றார்கள். சுங்கச்சாவடி மற்றும் பெட்ரோல் பங்கில் பதிவான சிசிடிவி காட்சியின் அடிப்படையில் இவர்கள் நால்வரும் தான் குற்றவாளிகள் என்று போலீசார் உறுதி செய்தார்கள். பின் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும், யாரும் இனிமேல் செய்ய முடியாத அளவுக்கு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் எனவும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வந்தது. அதோடு சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் தான் வழக்கு விசாரணைக்காக சம்பவம் நடந்த இடத்திற்கு குற்றம் சாட்டப்பட்ட ஜோலு நவீன், கேசவலு, முகம்மது பாஷா , சிவா ஆகிய நால்வரையும் போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது அவர்கள் 4 பேரும் தப்பித்துச் செல்ல முயன்ற போது போலீசார் 4 பேரையும் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றார் என்று கூறப்படுகிறது. இந்த என்கவுண்டர் பிரியங்கா தந்தை கூறியது, ‘என் மகள் இறந்து பத்து நாட்கள் ஆகின்றன. இந்த கொடிய மிருகங்களை காவல்துறையினர் சுட்டுக் கொன்றதன் மூலம் என் மகளின் ஆத்மா சாந்தியடையும். இந்த மிருகங்களை சுட்டுக் கொன்ற போலீசாருக்கும், தெலுங்கானா அரசுக்கும் என்னுடைய நன்றிகளை கூறுகிறேன் என்று கண்ணீர் மல்கக் கூறினார்.

-விளம்பரம்-
sajnar

இதுமட்டுமில்லாமல் இந்த நாலு பேரை என்கவுண்டர் செய்ததை கேள்விப்பட்ட ஹைதராபாத் கல்லூரி மாணவிகள் கல்லூரி பேருந்தில் சென்ற போது தங்களுடைய மகிழ்ச்சியையும், நன்றிகளையும் வெளிப்படுத்தினார்கள். மேலும், பாதுகாப்புக்கு நின்ற போலீசார்களைப் பார்த்து கைகாட்டி தங்களது பாராட்டுகளையும் நன்றிகளையும் கொண்டாடி வருகின்றனர். இனிமேல் இந்த மாதிரியான கோர சம்பவம் எங்கும் நடைபெறாத இருப்பதற்கு இந்த என்கவுண்டர் முன்னுதாரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த மாதிரியான தீர்ப்புகள் வந்தால் தான் நாட்டில் பெண்களுக்கு நடக்கும் அநியாயம் ஒழிக்கப்படும் என்று கூறி வருகிறார்கள்.

Advertisement