பிரியங்கா வழக்கில் 4 பேரை என்கௌண்டர் செய்த இந்த சாஜ்னார் யார் தெரியுமா ? கேட்டா ஆடி போயிடுவீங்க.

0
29382
sajnar

கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெண் மருத்துவர் ஒருவர் கற்பழித்து எரிக்கப்பட்ட சமத்துவம் நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கில் சம்மந்தபட்ட முகமது பாஷா, கேசவலு, நவீன், சிவா ஆகிய 4 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், இன்று நள்ளிரவு3.30 மணி முதல் 5 மணி அளவில் சட்டன்பள்ளி பைபாஸில் அதாவது பிரியங்காவின் உடல் எரிந்து கிடந்த அதே இடத்தில் குற்றவாளிகளை அழைத்துச் சென்று பிரியங்காவை எப்படி கொலை செய்தார்கள் என்பதை விவரித்து காட்ட சொல்லி இருக்கிறார்கள். அப்போது அந்த 4 பேரும் தப்பி செல்ல முயன்றதால் அவர்களை என்கௌண்டர் செய்ததாக போலீஸ் வட்டாரத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

sajjanar priyanka

- Advertisement -

பிரியங்கா இறந்து 10 நாட்கள் ஆன நிலையில் தற்போது பிரியங்கா இறந்த அதே இடத்தில் பிரியங்காவை அநியாயமாக கொன்ற அந்த 4 நயவஞ்சகர்களும் சுட்டுக்கொல்லப்பட்டதை எண்ணி பலரும் நிம்மதி அடைந்துள்ளனர். பிரியங்கா வழக்கில் என்கௌண்டரை நடத்தியது சைபராபாத் காவல் அதிகாரியான சாஜ்னார் என்பவர் தான்.இவர் நடத்தியது முதல் என்கௌண்டர் கிடையாது ஏற்கனவே இவர் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பாகவே இரண்டு பெணகள் மீது ஆசிட் அடித்த மூன்று நபர்களை என்கௌண்டர் செய்த ஹீரோ என்ற செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் பாருங்க : சத்தியராஜ் மகனாக நடித்த சிறுவன் தான் தற்போது அடுத்த சாட்டை படத்தில் நடித்துள்ளாரா? யாருனு பாருங்க.

கடந்த 2008 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் வரங்கள் பகுதியில் கல்லூரி மாணவிகள் இரண்டு பேர் மீது ஆசிட் தாக்குதலை நடத்தியுள்ளார்கள். விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சீனிவாஸின் காதலை ஸ்வாப்னிகா நிராகரித்ததையடுத்து, வாரங்கல் நகரில் உள்ள ககாதியா தொழில்நுட்பக் கழகத்தில் மாணவிகளாக படித்து வந்த ஸ்வப்னிகா மற்றும் பிரணிதா ஆகியோர் ஆசிடால் தாக்கப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்ட சீனிவாஸ் ராவ், 25, மற்றும் அவரது கூட்டாளிகளான பி.ஹரிகிருஷ்ணா, 24, மற்றும் பி சஞ்சய், 22, ஆகியோர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்.

-விளம்பரம்-
sajjanar priyanka reddy

இந்த என்கௌண்டர் குறித்து அப்போது பேசியுள்ள சாஜ்னார், பெண்கள் மீது ஆசிட் வீசப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று சம்பவம் எவ்வாறு நடந்தது என்று விசாரித்துக் கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் போலீசாரை தாக்கி தப்பிக்க முயன்றதால் அவர்கள் 3 பேரையும் சுட்டு விட்டோம் என்று கூறியிருக்கிறார். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்றால் இந்த என்கௌண்டர் நடைபெற்ற போது சாஜ்னார் ஒரு சாதாரண கீழ்மட்ட போலீஸ் அதிகாரியாக தான் இருந்து வந்தார். ஆனால், இந்த என்கவுண்டர் மூலம் என்கவுண்டர் காப்பு என்று புகழாரம் சூட்டப்பட்டார் சாஜ்னார். மேலும், இதையடுத்து இவருக்கு பணி உயர்வும் அளிக்கப்பட்டது.

Advertisement