தள்ளு முள்ளால் தடுக்கி விழுந்த போலீசார், விஜய் அருகில் சென்ற ரசிகனுக்கு Bouncer விட்ட Punch. போலீசை கடுப்பேற்றிய குட்டி தளபதி ரசிகன்.

0
420
varisu
- Advertisement -

வரும் பொங்கலுக்கு தமிழ் மக்களுக்கு வாரிசு, துணிவு என்ற இரண்டு பொங்கல் பரிசுகள் கிடைக்கும் நிலையில் நேற்று விஜய் நடித்திருந்த வாரிசு படத்தின் இசை வெளியிட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 5 ஆயிரம் ரசிகர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நடிகை விஜய்யை காணவும் குறிப்பாக அவரின் குட்டி ஸ்டோரியை காணவும் அவரது ரசிகர்கள் பலரும் ஆவலாக இருந்தனர்.

-விளம்பரம்-

இந்தநிலையில் கடந்த பீஸ்ட் திரைப்படத்திற்கு இசை வெளியிட்டு விழா நடைபெறாத காரணத்தினால் வாரிசு பாட ஆடியோ வெளியிட்டு விழாவை கண்டே ஆகவேண்டும் என்று ரசிகர்கள், மற்றும் பிரபலங்கள் ஒவ்வொருவராக அங்கு கூட தொடங்கினர். ஏற்கனவே நேரு விளையாட்டு அரங்கம் நிறைந்து விட்ட நிலையில் பலருக்கும் அனுமதி சீட்டு கிடைக்காமல் அங்கு வெளியில் கால் வலிக்க காத்துக்கொண்டிருந்தனர்.

- Advertisement -

இந்த நிலையில் அரங்கத்திற்குள் துளைய அனுமதி கிடைத்தவுடன் நுழைவு சீட்டு உள்ளவர்கள் மட்டுமே அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். 40ஆயிரம் பேர் அமரக்கூடிய அந்த அரங்கம் ஏற்கனவே நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் நுழைவு சீட்டு இல்லாதவர்கள் உள்ளே நுழைவதற்கு எண்ணி வாசலில் இருந்த போலீசாரை வெறி கொண்டு முட்டி தள்ளிக்கொண்டு அரங்கத்திற்குள் செல்ல முயன்றனர்.

இந்த நிலையில் உடனடியாக சுதாரித்து கொண்ட போலீசார் அரங்கத்தின் கேட்டை பூட்டினர். இதனால் அங்குள்ளவர்களுக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்ப்பட்டது. மேலும் போலீசாரை கீழே தள்ளி ஏறி மிதித்துக்கொண்டு உள்ளே செல்ல முயற்சி செய்த்தனர். அதோடு பேனர்களை கிழித்தது, கேட்டுகளை எட்டி உதைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். இதனால் அங்கிருந்த போலீசாருக்கு காயங்கள் ஏற்பட்டதை தொடர்ந்து தொடர்ந்து போலீசார் லேசான தடியடியில் ஈடுபட்டு அங்குள்ளவர்களை விரட்டி அடித்தனர்.

-விளம்பரம்-

போலீசாரின் அடிக்கு பயந்து அங்குள்ள ரசிகர்கள் அக்கம் பக்கத்திலிருந்த தெருக்களில் அடைக்கலம் புகுந்தனர். இந்த நிலையில் அந்த இடத்தில செருப்புகள் சிதறி கடந்தது. இப்படியிருக்கும் போது அங்கு ஒரு பள்ளி மாணவன் கையில் அனுமதி சீட்டுடன் வந்து அங்குள்ள தலைமை போலீசாரிடம் ‘சார் பாஸ் இருக்கு’ என்று கோவத்தில் இருந்த போலீசார் அந்த சிறுவனை அடிக்காத குறையாக ‘டேய் போடா மயிறு’ என்று திட்டி அங்கிருந்து போக சொன்னார்.

மேலும், இதே நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவரை பாதுகாவரலர்கள் அடித்து உதைத்த வீடியோவும் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் விஜய் வந்த போது ரசிகர் ஒருவர் விஜய்க்கு அருகில் சென்றுவிட்டார். அப்போது அங்கிருந்த பவுன்சர்கள் அவரை பிடித்து தள்ளி வெளியில் கொண்டு சென்று விட்டிருக்கிறார்கள்.பவுன்சர்கள் விஜய் ரசிகரை தாக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.  

இந்தநிலையில் விஜய்யின் வாரிசு ஆடியோ வெளியிட்டு விழாவில் கலந்து கொள்ள நடிகர் மற்றும் அரசியல்வாதியான உதயநிதி ஸ்டலின் அவர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இவரின் ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் தான் அஜித் நடித்த துணிவு படத்தை வெளியிடுகிறது மேலும் விஜய் நடித்த வாரிசு படத்தை சென்னை உள்பட 6 இடங்களில் ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் தான் வெளியிடுகிறது என்பது குறிப்பிடதக்கது

Advertisement