தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, 'கோட்' படம் குறித்து போட்டிருக்கும் பதிவு தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் வசூல் சாதனையும் செய்து வருகிறது. அந்த வகையில் இறுதியாக லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் வெளியாகி இருந்த 'லியோ' படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்திருந்தது.

லியோ படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் விஜயின் 'கோட்' படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். சென்னை, திருவனந்தபுரம், ஹைதராபாத், தாய்லாந்து, ரஷ்யா, அமெரிக்கா போன்ற பல இடங்களில் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு நடந்ததாக கூறப்படுகிறது. தற்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், சமீபத்தில் தான் கோட் படத்தின் பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாக இருந்தது.
கோட் படத்தின் பாடல்கள்:
கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி கோட் படத்தினுடைய முதல் பாடலான 'விசில் போடு' வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை அடுத்து நடிகர் விஜயின் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு கோட் படத்திலிருந்து 'சின்ன சின்ன கண்கள்' என்ற இரண்டாவது பாடல் வெளியாகியிருந்தது. இந்தப் பாடல் விஜய் பாடியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த பாடலில் மறைந்த பாடகி பவதாரணி குரலும் வந்திருக்கிறது.
We are getting an amazing trailer ready for you. So please stay calm and give us a couple of days ❤️🤗 Will give you a proper update tomorrow #GOAT
— Archana Kalpathi (@archanakalpathi) August 12, 2024
மூன்றாவது பாடல்:
மறைந்த பாடகி பவதாரணியின் குரல் ஏஐ மூலம் மறு உருவாக்கம் செய்து இருக்கிறார்கள். இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. அதனைத் தொடர்ந்து கோட் படத்தின் மூன்றாவது பாடல் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. இப்பாடலுக்கு 'ஸ்பார்க்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜா மற்றும் விருஷா பாலு இணைந்து பாடி இருக்கிறார்கள்.
பாடல் குறித்த விமர்சனம்:
மேலும், இந்தப் பாடலுக்கு கங்கை அமரன் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்த பாடல் ரசிகர்களிடையே கலவையான விமர்சனம் தான் பெற்றிருந்தது. பின், இந்த பாடலில் விஜய் இளமை தோற்றத்தில் ஸ்டைலாக இருக்கிறார். அதற்கும் பாடலில் வரும் விஜய், அவரைப் போல் இல்லை என்று இணையவாசிகள் விமர்சனங்கள் செய்து இருந்தார்கள். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கும் இப்படம் வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

அர்ச்சனா கல்பாத்தி பதிவு :
இந்நிலையில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் பக்கத்தில், உங்களுக்காக ஒரு அற்புதமான ட்ரெய்லரை நாங்கள் தயார் செய்து வருகிறோம். எனவே தயவு செய்து பொறுமை காத்திருங்கள். எங்களுக்கு இரண்டு நாட்கள் மட்டும் அவகாசம் கொடுங்கள், நாளை உங்களுக்கு சரியான அப்டேட்டை தருகிறேன்' என்று பதிவிட்டுள்ளார். தற்போது இவரின் பதிவு, ரசிகர்களை மேலும் உற்சாகமாக்கியுள்ளது.






