நடிகை பானுப்பிரியா 'சக்கரவர்த்தி' படத்தில் நடிக்கும் போது செய்த பிரச்சனை குறித்து தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டியில் பேசியிருக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தவர் பானுப்பிரியா. பானுப்பிரியா சிறந்த நடிகை மட்டும் இல்லாமல் ஒரு சிறந்த நடன கலைஞரும் ஆவார். 80- 90 காலகட்டத்தில் தொடங்கி தற்போது வரை இவர் சினிமாவில் நடித்து வருகிறார். கடைசியாக இவர் தமிழில் 'அயலான்' திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், ஆஸ்கார் மூவிஸ் ப்ரொடியூசர் பாலாஜி பிரபு, நடிகை பானுப்பிரியா தனது அப்பாவிற்கு ( எம் .பாஸ்கர்) கொடுத்த பிரச்சனை குறித்து சமீபத்தில் பேட்டியில் பேசியுள்ளார். அதில், நடிகை பானுப்பிரியாவிற்கு 'சக்கரவர்த்தி' படத்தில் நடிப்பதற்காக 5 லட்சம் ரூபாய் சம்பளமாக பேசப்பட்டது. முன் பணமாக ஒரு லட்சம் கொடுக்கப்பட்ட நிலையில், அவர் பத்து நாட்கள் வந்து நடித்துக் கொடுத்துவிட்டார். அதற்குப் பிறகு நடிகர் கார்த்திக் சாரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு, திடீரென்று நான் ஷூட்டிங் வர முடியாது என்று கூறிவிட்டார்.
பானுப்பிரியா செய்த பிரச்சனை:
அதற்குப் பிறகு, எனது அப்பா என்ன பிரச்சனை என்று கேட்க, முழு சமபளத்தையும் கொடுத்தால் தான் நடிப்பேன் என்று கூறிவிட்டார். அதற்கு அப்பா, அது வழக்கமில்லை. டப்பிங் முடிந்த பிறகு நான் முழு பணத்தையும் கொடுத்து விடுகிறேன் என்றார். உடனே பானுப்பிரியா, உங்கள் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை என்று கூற, எனது அப்பா 5 லட்சத்திற்கான டிடி ஒன்றை எடுத்துக் கொண்டு, தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதம் ஒன்று எழுதினார்.
https://www.youtube.com/watch?v=3gjVK4juK38
அப்பா எழுதிய கடிதம்:
அதில், நடிகை பானுப்ரியா முழு சம்பளத்தையும் கொடுத்தால் தான் படத்தை முடித்து கொடுப்பேன என்றும், என் மீது நம்பிக்கை இல்லை என்றும் கூறுகிறார். அதனால், அவரின் சம்பளத்தை தயாரிப்பாளர் சங்கத்தில் ஒப்படைக்கிறேன். ஏனென்றால், என்னை நம்பாத அவரை நானும் நம்ப தயாராக இல்லை. அவர் இந்த படத்தை முடித்த பின்பு, நீங்கள் அவரிடம் பணத்தை கொடுத்து விடுங்கள் என்று எழுதியிருந்தார். அதனைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து பானுப்பிரியாவை விசாரித்ததால், அவர் அப்பாவிற்கு ஃபோன் செய்து மன்னிப்பு கேட்டார்.

பானுப்ரியாவுக்கு எனது அப்பா வைத்த செக்:
ஆனால், அப்பா நீங்க சொன்னபடியே நடந்து கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார். இடையே படத்தின் வியாபாரத்தில் பிரச்சனை ஏற்பட்டு, படம் வெளியாகாமல் இழுத்துக் கொண்டே இருந்தது. ஆனால், பானுப்பிரியா தயாரிப்பாளர்களிடம் தனது சம்பள டிடி கேட்க, அவர்கள் அப்பாவிற்கு ஃபோன் செய்து டிடியை கொடுத்து விடலாமா என்றார்கள். ஆனால், அப்பா இப்போதைக்கு கொடுக்க வேண்டாம் நான் மறுபடியும் ஏதாவது படம் எடுக்க வேண்டியது இருந்தால், பானுப்பிரியா பிரச்சினை பண்ணுவாங்க என்று கூறிவிட்டார்.

மூன்று வருடங்கள் கழித்து கிடைத்த சம்பளம்:
கடைசியில், அந்த படம் ஷூட்டிங் முடிந்து, 3 வருடங்கள் பிறகு தான் வெளியாகியிருந்தது. அப்போதும், தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து அப்பாவிற்கு ஃபோன் செய்து இப்பொழுது சம்பளத்தை கொடுத்து விடலாமா என்று கேட்டார்கள். அதற்கு, அப்பா படத்தின் முதல் காட்சி ஓடி முடிந்த பிறகு அந்த பணத்தை கொடுத்து விடுங்கள் என்று ஸ்ட்ரிக்காக சொல்லிவிட்டார். அந்தப் படத்தின் முதல் காட்சி ஓடி முடிந்த பின்னர் தான் பானுப்பிரியாவிற்கு தனது முழு சம்பளமும் கிடைத்தது என்று கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ டான்ஸ் ஸ்பெஷல் மீடியாவில் வைலாகி வருகிறது.






