தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக நெல்சன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கியதன் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தை நெல்சன் இயக்கி இருந்தார். இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. தற்போது நெல்சன் அவர்கள் தளபதி விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். மேலும், பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டது. பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்களுக்கு மிக பெரிய ஏமாற்றம் என்று பலர் கூறி வருகின்றனர்.எதிர்பாராத விதமாக இந்தப் படம் வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சங்களை பெற்றுவிடுகிறது.
ஏமாற்றத்தை கொடுத்த பீஸ்ட் :
தமிழகத்தில் மட்டும் 800-க்கும் அதிகமான திரையரங்குகள் பீஸ்ட் படம் வெளியிடப்பட்டது. படம் வெளியான முதல் நாளே வலிமை, அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன் ஆகிய பட வசூலை எல்லாம் பின்னுக்கு தள்ளி விட்டதாக ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். ஆனால் தியேட்டர்களில் பீஸ்ட் செகண்ட் ஆஃப் ஓடிக்கொண்டிருக்கும் போதே சோசியல் மீடியாவில் பீஸ்ட் குறித்த மீம்ஸ் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்து விட்டது.
பீஸ்ட்டை ஓரம் கட்டிய Kgf 2:
பின் மறுநாள் கன்னட சூப்பர் ஸ்டார் யாஷ் நடிப்பில் கேஜிஎப் 2 திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு தமிழகம் முழுவதும் தாறுமாறாக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. உடனே யூட்யூப் ரியூவர்ஸ் முதல் நெட்டிசன்கள் வரை எல்லோருமே கேஜிஎஃப் படத்துடன் ஒப்பிட்டு பீஸ்ட்டை பயங்கரமாக கலாய்த்து விமர்சிக்க ஆரம்பித்தார்கள். இப்படி சோசியல் மீடியாவில் ரசிகர்கள், நெட்டிசன்கள் என பலரும் பீஸ்ட் படத்தை விமர்சித்து இருந்தாலும் இதுவரை பீஸ்ட் படத்தை பற்றி யாரும் வாய் திறக்கவில்லை.
தயாரிப்பாளர் போட்ட பதிவு :
பீஸ்ட் திரைப்படத்தை விட Kgf 2விற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருவதால் பல திரையரங்குகளில் பீஸ்ட் படத்தை தூக்கிவிட்டு kgf படத்தை தான் போட்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் பிசா, சூது கவ்வும் போன்ற படங்களை தயாரித்த சி வி குமார், தமிழ் படங்களுடன் Kgf படத்தை ஒப்பிட்டு பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘ஓரு முள்ளும் மலரும் , கல்யாண பரிசு காதலிக்கநேரமில்லை , recently ஆடுகளம் , சூதுகவ்வும் , முண்டாசுபட்டி சதுரங்கவேட்டை , ஜிகர்தண்டா , இன்று நேற்று நாளை .
நம்ம லெவெல்க்கு இல்ல :
மெட்ராஸ் , ககபோ,தீரன் அதிகாரம் ஒன்று , இறுதிசுற்று , வடசென்னை , ராட்சாசன் , அசுரன் , பரியேறும் பெருமாள் , கைதி சார்பேட்டா பரம்பரை , ஜெய்பீம் , டாணாக்காரன் இதெல்லாத்தையும் விட இந்த mass masala கோலார் தங்க வயல் தான் best of best ணா தமிழ் சினிமா நல்லாவே இருக்குப்பா . தயவு செய்து விட்ருங்கப்பா, என் பார்வையில் Kgf ஒரு நல்ல பொழுதுபோக்கு படம் தான் ஆனால், எங்கள் தலைசிறந்த படிப்புகளுக்கு இணையாக கிடையாது என்று கூறியுள்ளார்.