அந்த இருட்டு அறை நடிகையை விமல் ரூமிற்கு தள்ளி சென்று – விமல் குறித்து சர்ச்சையை கிளப்பிய தயாரிப்பாளர்

0
525
- Advertisement -

நடிகையிடம் விமல் நடந்து கொண்டதை குறித்து சினிமா தயாரிப்பாளர் அளித்து உள்ள பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விமல். இவர் படங்களில் மட்டுமில்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். இவர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த பசங்க திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகனாக மக்கள் மத்தியில் அறியப்பட்டார். அதை தொடர்ந்து இவர் களவாணி படத்தில் நடித்திருந்தார். மேலும், இந்த களவாணி படத்தின் மூலம் தான் இவருடைய சினிமா பயணம் வேற லெவலுக்கு சென்றது. அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-
Police Complaint Filed Against Vimal

மேலும், இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் இவரால் சினிமா உலகில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். அதுவும் கடந்த சில வருடங்களாக இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் இவருக்கு கை கொடுக்கவில்லை. தற்போது இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் விலங்கு. இது ஒரு வெப் சீரிஸ். இந்த படத்தை பிரசாத் பாண்டிராஜ் இயக்கி இருக்கிறார். இந்த வெப் சீரிஸ் பிப்ரவரி 18 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. இது ரசிகர்களை மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இது தவிர தற்போது விமல் அவர்கள் ஏராளமான படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

- Advertisement -

விமல் மீது மோசடி புகார்:

இந்த நிலையில் நடிகர் விமல் மீது சினிமா தயாரிப்பாளர் கமிஷனர் அலுவலகத்தில் மோசடி புகார் கொடுத்துள்ள சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் கோபி என்கிற சினிமா தயாரிப்பாளர் முதலில் விமல் மீது புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர், நடிகர் விமல் மன்னர் வகையறா படத்தை எடுத்தபோது என்னிடம் ஐந்து கோடி ரூபாய் கடன் வாங்கினார். மேலும், அந்த படத்தின் மூலம் வரும் லாபத்தில் பங்கு தருவதாகவும் என்னிடம் தெரிவித்தார். ஆனால், அவர் என்னிடம் வாங்கிய கடன் தொகை 5 கோடியை இதுவரை திருப்பி தரவில்லை. தற்போது அவர் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

Police Complaint On Actor Vimal | விமல் மீது போலீசில் புகார்

தயாரிப்பாளார் சொன்ன காரணம்:

ஆனால், எனக்கு தரவேண்டிய 5 கோடி ரூபாய் பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றி வருகிறார். பணத்தை திருப்பி கேட்டால் எனக்கு கொலை மிரட்டல் விடுகிறார். ஆகவே நடிகர் விமல் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்று கூறி இருந்தார். இது தொடர்பாக கோபியின் நண்பரும் சினிமா தயாரிப்பாளருமான சிங்காரவேலன் தற்போது விமல் மீது புகார் அளித்து பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, இயக்குனர் பூபதி பாண்டியன் நிறைய வெற்றிப் படங்களெல்லாம் கொடுத்திருக்கிறார். இவர் விமலை வைத்து மன்னர்வகையறா என்ற படம் எடுத்தார். இந்த படத்தை எடுக்கும்போது பாதியில் பணம் இல்லாத காரணத்தினால் என்னுடைய நண்பர் கோபி அணுகி இருக்கிறார்கள். அவரிடம் படம் எடுத்து முடித்து ரிலீஸ் செய்யும்போது 5 கோடி ரூபாய் தருவதாகவும் பின் படத்தில் வரும் லாபத்தை தருகிறோம் என்றும் கூறினார்கள்.

-விளம்பரம்-

தயாரிப்பாளர் சிங்காரவேலன் அளித்த பேட்டி:

அதனால் கோபி விமலுக்கு பணம் தந்தார். ஆனால், மன்னர் வகையறா படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை அடையவில்லை. இதற்கு முன்பே விமல் நடித்த எட்டு படங்களும் தோல்வி தான். இதனால் விமலை நம்பி எந்த தயாரிப்பாளர்களும் படம் எடுக்க தயங்கினார்கள். அதோடு மன்னர் வகையறா படத்தை எடுத்துக் கொண்டிருக்கும்போதே களவாணி 2 படத்தை நானே தயாரிக்கிறேன் என்று விமல் பேட்டி அளித்திருந்தார். அதற்கான ஆதாரங்கள் எல்லாம் என்னிடம் இருக்கிறது. அப்போது என்னிடம் வந்து படம் எடுப்பதற்கு முன் ஒன்றரை கோடி ரூபாய் கொடுங்கள் படத்தின் உரிமையை உங்களுக்கு கொடுக்கிறேன் என்று சொல்லி இருந்தார். நானும் ஒன்றரை கோடி ரூபாயை அவரிடம் கொடுத்தேன்.

நடிகையிடம் விமல் நடந்து கொண்ட விதம்:

ஆனால், அந்த படமும் வெற்றி அடையவில்லை. எங்களைப் போன்று சினிமா துறையில் உள்ள பல பிரபலமான தயாரிப்பாளர்களும் விமலிடம் கோடிக்கணக்கான அளவில் பணத்தை கடனாக கொடுத்திருக்கிறார்கள். விமல் யாருக்குமே பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. கோபி மற்றும் நானும் நாங்கள் கொடுத்த பணத்தை கேட்டதற்கு ஏமாற்றி வருகிறார். ஆரம்பத்தில் பணம் தருகிறேன், நான் வாங்கியது உண்மைதான் என்று கூறிவந்த விமல் சமீபகாலமாக வழக்கறிஞர் பேச்சைக் கேட்டுக் கொண்டு நான் வாங்கவில்லை என்று மாற்றிப் பேசுகிறார். அதுமட்டுமில்லாமல் நடிகை இடமும் விமல் நடந்து கொண்ட விதத்தால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இருட்டு-அறையில்-முரட்டு-குத்து போன்ற சில படங்களில் நடித்த நடிகையை வைத்து படம் எடுத்தார்கள். அந்த படத்தை விமல் தயாரித்து இருந்தார்.

விமலை வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர்:

அந்த படத்தை 17 நாள் சூட்டிங் முடிந்து விட்டது. அந்த நடிகையை ரூமுக்கு அழைத்து வரச்சொல்லி இருந்தார் விமல். பின் அவர் என்ன பேசினார் என்று தெரியவில்லை அந்த நடிகை கோடி ரூபாய் கொடுத்தால் கூட நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லி சென்றுவிட்டார். அதற்கு பிறகு வேறு ஒரு நடிகையை வைத்து தான் படம் எடுத்தோம். அந்த 17 நாளுக்கு இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் வீண் செலவு ஏற்பட்டது. இப்படி இவரால் பல கோடி நஷ்டம் அடைந்தது. இவர் என்ன விஜயா? இல்ல விஜய் சேதுபதியா? மார்க்கெட் இருக்கும் அவர்களே எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நடித்துக் கொடுக்கிறார்கள். இவருக்கு மார்க்கெட் இல்லை என்றாலும் தயாரிப்பாளர்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டத்தை தந்திருக்கிறார். அதற்கான எல்லா ஆதாரங்களும் என்னிடம் இருக்கின்றது என்று சிங்காரவேலன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement