சுந்தரபாண்டியன் 2-ல் விஜய்சேதுபதிக்கு பதிலாக இந்த வில்லன் நடிகர் நடிக்கிறாரா..?

0
674

நான் அடிப்படையில் ஒரு தயாரிப்பாளர். அருண் விஜய் நடிச்ச ‘குற்றம் 23’ படத்தைத் தயாரிச்சேன். இப்போ மகிழ் திருமேனி இயக்கத்துல ‘தடம்’ படத்தைத் தயாரிச்சுக்கிட்டு இருக்கேன். அடுத்து சசிகுமார்கூட ‘சுந்தரபாண்டியன் 2’ படத்தைத் தயாரிக்கிறதோட, அதுல ஒரு கேரக்டர்ல நடிக்கிறேன்.

inderkumar

என் முழு அடையாளம், தயாரிப்பாளர்தான். நடிக்கிறது எதார்த்தமா அமைஞ்சது. ‘குற்றம் 23’ படத்தோட ஒரு நிகழ்ச்சியை டி.வியில பார்த்துட்டு, சசிகுமார் ‘கொடிவீரன்’ படத்துக்கு வில்லனா நான் நடிச்சா நல்லாயிருக்கும்னு டைரக்டர் முத்தையாவிடம் சொல்லியிருக்கார். அப்படி நடந்ததுதான், நான் நடிகரானது. பொதுவாக சினிமாவுக்கு வர்ற எல்லோருக்குமே ஒரு கனவு இருக்கும்ல… எனக்கு தயாரிப்பாளர் ஆகுறதுதான் முதல் கனவு.”

சுந்தரபாண்டியன்’ படத்துல இருந்த நடிகர்கள் அப்படியே இதுலேயும் தொடருவாங்களா, மாற்றம் இருக்குமா?
விஜய்சேதுபதி இருப்பாரானு கேட்க வர்றீங்க. இந்தப் படத்துல நிறைய சர்பிரைஸ் இருக்கு. முதல் பாகத்துல விஜய்சேதுபதி நடிச்ச கேரக்டர்ல, இந்தப் படத்துல நான் நடிக்கிறேன்.

vijay sethubathi

நான் தஞ்சாவூர்காரன். பெங்களுர் சிட்டில வளர்ந்த எனக்கு, ‘கொடிவீரன்’ கிராமத்து வாழ்க்கையைக் கத்துக்கொடுத்துச்சு. இந்தப் படமும் கண்டிப்பா எனக்கு நல்ல அனுபவமா இருக்கும். ‘சுந்தரபாண்டிய’னைவிட, இந்தப் படம் டபுள் ட்ரீட். அந்தப் படம் சிங்கிள்னா, இது சிக்ஸர்!” என்கிறார், இந்தர்குமார்.