தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளரான கே ராஜன் சமீப காலமாக பல்வேறு நடிகர் நடிகைகளின் படங்களை மோசமாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய ராஜன், தற்போது வரும் கால கட்டங்களில் நம்மள நம்பி பணம் போடுகிற தயாரிப்பாளர்கள் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கிற இயக்குனர்கள் எல்லாம் குறைவு தான். ஆனால், அந்த காலத்தில் இருந்த இயக்குனர்கள், நடிகர்கள் மாறி இப்போது கிடையாது. இப்ப இருக்கிற இயக்குனர்கள் எல்லாம் ஹீரோ-ஹீரோயின்கள் நல்லா இருந்தால் போதும் தயாரிப்பாளர்கள் எப்படி போனால் என்ன என நினைப்பவர்கள் தான். மேலும், அதிக பட்ஜெட்டில் படம் எடுப்பதாலும், ஹீரோக்களுக்கு அதிக செலவு செய்வதால் தான் பட வாய்ப்புகள் அவர்கள் கொடுப்பார்கள் என்று நினைக்கிற இயக்குனர்கள் கூட்டம் தான் அதிகமாக உள்ளது.
நான் அனைத்து இயக்குனர்களுக்கும் ஒன்றே ஒன்று தான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எந்த நடிகரும், இயக்குனரும் படத்திற்கு பணம் கொடுக்க மாட்டார்கள். அந்த படம் இந்த அளவிற்கு வெற்றி அடைவதற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளர்கள் கொடுக்கும் பணத்தில் தான். அதோடு மக்களுக்கு நல்ல தரமான படங்களை கொடுக்க வேண்டும். அதிலும் நல்ல கருத்துள்ள படங்களை கொடுக்க வேண்டும் என்றும் நினைப்பவர்கள் தற்போது குறைந்து விட்டார்கள்.
இதையும் பாருங்க : காமெடி நடிகர் சதீஷின் திருமணம். நேரில் சென்று வாழ்த்திய பிக் பாஸ் 3 பிரபலம். புகைப்படம் இதோ.
சமீபத்தில் ஆர் ஜே பாலாஜி என்ற காமெடி நடிகர் நடிப்பில் வெளியான எல் கே ஜி திரைப்படம் 3.5 கோடி தான் பட்ஜட். ஆர் கே பாலாஜி ஒன்றும் மிகப்பெரிய நடிகர் கிடையாது சாதாரண காமெடி நடிகர் தான். மேலும், எல் கே ஜி படமும் மிகவும் சின்னப்படம் தான். ஆனால், அந்த படம் 7 கோடி வசூல் செய்தது, ஜி தமிழ் தொலைக்காட்சிக்கு 1.5 கோடிக்கு சாட்டிலைட் உரிமம் பெற்றது. மொத்தம் 10 கோடி வியாபாரம் செய்தது. நல்ல படம் என்றால் மக்கள் கண்டிப்பாக பார்ப்பார்கள்.
ஆனால், நடிகர்கள் படம் எல்லாம் உத்திக்கொண்டு போய் எத்தனை தயாரிப்பாளர்கள் நடுத்தெருக்கு வந்திருக்கிறார்கள் என்று நான் இந்த ஒரு மாசத்தில் பார்த்திருக்கிறேன். எங்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் 10 கோடி சம்பளம் வாங்கும் ஒரு ஹீரோ, 5 கோடி சம்பளம் வாங்கும் ஒரு இயக்குனரை வைத்து எடுத்த படங்களால் 12 கோடி 15 லாஸ் ஆனது என்று குறிப்பிட்டுள்ளார். தயாரிப்பாளர் கே ராஜன் குறிப்பிட்டது வேறு எந்த படத்தையும் இல்லை சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சங்கத் தமிழன் படத்தை தான். விஜய் சேதுபதி நடித்த இந்த படத்தினை விஜயா ப்ரோடக்க்ஷன் தயாரிப்பில் லிப்ரா ப்ரொடக்ஷன் வெளியிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தயாரிப்பாளர் கே ராஜனின் இந்த கருதினால் விஜய் சேதுபதியால் விஜயா ப்ரொடக்க்ஷன் தயாரிப்பு நிறுவனமே க்ளோஸ் ஆகிவிட்டது என்று சினிமா வட்டாரங்கள் கிண்டலடித்து வருகின்றனராம்.