தமிழில் யோகி பாபு, சூரி வரிசையில் தற்போதுள்ள காமெடி நடிகர்களில் சதீஷும் ஒருவர். காமெடி நடிகர் சதீஷ் 8 வருடங்களாக கிரேசி மோகனிடம் உதிவியாளராக பணியாற்றியவர்.இவர் முதன்முதலில் ஏ. எல் விஜய் இயக்கிய பொய் சொல்ல போறோம் என்ற காமெடி படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றினார். அதன் பின்னர் மதராஸபட்டினம், எதிர் நீச்சல், மான் கராத்தே போன்ற படங்களில் காமெடியனாக நடித்தார். சதிஷ் 2003 இல் வெளியான விடாது சிரிப்பு என்ற சீரியல் ஒன்றிலும் நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இந்த காமெடி தொடர் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி யுள்ளது. ஆனால் சில பல காரணங்களால் இந்த தொடர் 25 எபிஸோடகள் மட்டுமே ஒளிபரப்பாகியுள்ளது. தற்போது யோகி பாபு மற்றும் சூரிக்கு இடையே பட வாய்ப்புகளை பிடிக்க போட்டி நடந்து வந்தாலும் சூரியை விட சதீஷ் அதிகபடியான பட வாய்ப்புகளை பிடித்து விடுகிறார். எப்போதும் களகளவேனு இருக்கும் சதீஷுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்து முடிந்ததாக ஒரு செய்தி பரவியது. அதே போல இவர் கீர்த்தி சுரேஷுடன் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளத்தில் வெளியானது.
இதையும் பாருங்க : மகாநதி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவருக்கா இந்த கதி.
இதனால் கீர்த்தி சுரேஷுக்கு சதீஷுக்கு திருமணம் முடிந்ததாக கூட ஒரு வதந்தி பரவியது. இதனால் சதீஷை மற்ற நடிகர்களும் சதீஸ் எந்த நடிகரை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்று கலாய்த்து வந்தனர். இந்த நிலையில் தனது திருமணம் குறித்த கிடலுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடந்த மாதம் காமெடி நடிகர் சதீசுக்கு ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் இயக்கத்தில் வெளியான 'வேலைக்காரன்' படத்தில் மோகனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நாகசுதர்சன் 'சிறிய இடைவேளைக்கு பின்' என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். இதில் சதீஷ் ஹீரோவாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. .

சமீபத்தில் நடிகர் சதீஷின் திருமணம் இனிதே நிறைவடைந்துள்ளது. இந்த திருமணத்தில் பல்வேறு சினிமா பிரபலங்களும் அரசியில் பிரபலங்களும் கலந்து கொண்டனர். அந்த வகையில் காமெடி நடிகர் சதீஷுடன் பல படங்களில் நடித்த நடிகையும் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் சர்ச்சைக்குரிய போட்டியாளரான மதுமிதா, சதீஷின் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்தியுள்ளார். புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.





