நடிகை சமந்தா, விவாகரத்திற்கு முன்பு தன்னிடம் பேசிய சில விஷயங்கள் குறித்து பிரபலம் ஒருவர் கூறியிருக்கும் தகவல் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பழமொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
இதனிடையே நடிகை சமந்தா அவர்கள், கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமந்தா- நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள்.
சமந்தா- நாக சைதன்யா பிரிவு:
மேலும், இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பின், இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், கருத்துகளும் எழுந்த வண்ணம் இருந்தது. அதோடு இவர்களுடைய பிரிவுக்கு காரணம், ‘ஊ சொல்றியா’ என்ற பாடல் என்று பலருமே கூறி இருந்தார்கள். அந்தப் பாடலில் நடிகை சமந்தா பயங்கர கிளாமராக நடனமாடி இருந்தார். ஆனால், இதுவரை இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை? ஏன் பிரிந்தார்கள்? என்று எந்த விவரமும் தெரியவில்லை.
நாக சைதன்யா- சோபிதா நிச்சயதார்த்தம்:
அதைத்தொடர்ந்து, சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா, சோபிதாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக சோசியல் மீடியாவில் வதந்திகள் பரவியது. அதற்கு ஏற்றார் போல் சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் மிக எளிமையாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அதனால், நடிகை சமந்தாவிற்கு ஆறுதலாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். வைரத்தை தொலைத்து, தங்கத்தை தேடுகிறார் என நாக சைதன்யாவுக்கு எதிராக ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
சமந்தா குறித்து நீலிமா குணா:
விரைவில் நாக சைதன்யாவிற்கு நடிகை சோபிதாவுடன் திருமணம் நடக்க உள்ள நிலையில், தயாரிப்பாளர் நீலிமா குணா, சமந்தா குறித்து சில விஷயங்களை கூறியுள்ளார். அதாவது கடந்த 2023 ஆம் ஆண்டு சமந்தா நடிப்பில் வெளியான படம் ‘சகுந்தலம்’ . இந்த படத்தை இயக்கியது குணசேகர், அவருடைய மகள் நீலிமா குணா தான் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளராக பணியாற்றினார். நீலிமா குணா, கடந்த 2021 ஆம் ஆண்டு சமந்தா விவாகரத்து பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அவரை நேரில் சந்தித்து சகுந்தலம் கதையை குறித்து பேசி இருக்கிறார்.
குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்ட சமந்தா:
அப்போது, அந்த கதை சமந்தாவிற்கு பிடித்து விட்டதாகவும் ஆனால், ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் முடிவதற்குள் அந்த திரைப்படப் பணிகளை முடித்து தருமாறு அவர் கேட்டுக் கொண்டாராம். ஏனென்றால், அதற்குப் பிறகு தனது கணவரோடு நேரத்தை செலவிட்டு, குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு வாழ்க்கையில் செட்டிலாக விரும்பத்தாக சமந்தா நீலிமாவிடம் கூறி இருக்கிறார். இந்த சந்திப்பு முடிந்து மூன்று மாதங்களில் தான் சமந்தா மற்றும்நாக சைதன்யா இடையே விவாகரத்து ஏற்பட்டுள்ளது என்று நீலிமா குணா சமீபத்தில் தெரிவித்துள்ளார்.